Skip to content

உலக மொழிகளில் திருக்குறள்

உலக மொழிகளில் திருக்குறள்
சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் , நூலகத்துறை ஏற்பாடு செய்திருந்த ஐந்து நாள் திருக்குறள் கண்காட்சியில் நம் “உலக மொழிகளில் திருக்குறள் தொகுப்புத் திட்டம்” குழுவின் தொகுப்பில் உள்ள அரிய 64 நூல்களை நேரடியாகக் காட்சிப்படுத்தவும் , அதையே புகைப்படம் எடுத்து ஒரு மிகப்பெரிய பதாகையாக அடுத்த பல நாட்களுக்கு அங்கு திருக்குறள் போட்டி, உரை, கண்காட்சி நிகழ்ச்சிக்கு வரும் மாணவர்கள், பொதுமக்களுக்கு பார்வைக்கு வைக்கவும் அழைத்திருந்தனர். அங்கு நேரில் சென்று நூல்களைக் காட்சிப்படுத்தியது வலைத்தமிழ் குழு. மாண்புமிகு கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருக்குறள் கண்காட்சியைத் திறந்துவைத்து மாணவர்களின் திருக்குறளை ஓவியங்களை பார்வையிட்டு பேசினார்.

உலகில் எங்கும் காணக்கிடைக்காத ஒரு தொகுப்பாக உலக மொழிகளில் வெளிவந்துள்ள திருக்குறள் நூல்கள் பல நாடுகளிலிலிருந்து தொகுக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.

உங்கள் திருக்குறள் நிகழ்ச்சிகளில் , தமிழ் மாநாடுகளில் காட்சிப்படுத்த விரும்பினால் தொடர்புகொள்ளவும்.

இதற்கு உறுதுணையாக இருந்த இக்குழுவின் வள்ளுவர் குரல் குடும்பம் Chinnasamy Rajendiran அவர்களுக்கு நன்றி…

திருக்குறள் நூல்களை பாதுகாக்க , பல நாடுகளில் அச்சில் இல்லாமல் போன திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்களை அடையாளம் கண்டு மறுபதிப்பு செய்து , வெளிநாடுகளில் வெளிவந்த நூல்களை உரியவர்களுடன் புரிந்துணர்வு செய்து தமிழ்நாட்டில் அதை அச்சடித்து பாதுகாக்கவும் உருவாக்கப்பட்டுள்ள திருக்குறளுக்கான சிறப்பு பதிப்பகம் “வலைத்தமிழ் பதிப்பகம்” இதை முன்னெடுக்கும்.

அனைத்து திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்களையும் மக்கள் பயன்பாட்டில் அதிகரிக்க ஒரே இடத்தில் https://estore.valaitamil.com/ கிடைக்கச் செய்யவும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.

https://www.facebook.com/share/19xJjGrJrR/?mibextid=wwXIfr

வலைத்தமிழ் பார்த்தசாரதி.