உலக மகளிர் நாள்
ஒரு குடும்பம் என்ற சமூக அமைப்பின் ஆணிவேர் பெண்ணே, என்பதை இரண்டு கேள்விகள் மூலமாக வள்ளுவர் விளக்கி விடுவார்..
இல்லதென் இல்லவள்
மாண்பானால்…?
உள்ளதென் இல்லவள்
மாணாக் கடை…?
இரண்டு கேள்விகள்….
எல்லையில்லா பொருள்….
அணுவைத்துளைத்து ஏழ்கடலைப்
புகுத்தியது குறள் ..
ஆணில்
பெண்மையும்,
பெண்ணில்
ஆண்மையும்,
கண்கூடு…
அர்த்தநாரீஸ்வரர்
இதன் குறியீடு..
It’s our way of conveying the equality , inseparability of men and women
உடல் :உயிர் = ஆண் :பெண்
சிவமும் சக்தியும்
சரிபாதி..
இதுவே
வள்ளுவம் கூறும் நீதி…
உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு.#1122
இம் மடந்தையோடு எம்மிடையே உள்ள நட்பு முறைகள், உடம்போடு உயிர்க்கு உள்ள தொடர்புகள், எத்தன்மையானவையோ அத்தன்மையானவை.(மு.வ)
உடல் :உயிர் = கணவன் : மனைவி
In today’s language….
Hardware : Software = Husband : Wife..
One completes the Other.
One complement the Other ..
One adds meaning to the Other..
No Meaningful existence to One without the Other…
One by the side of One is
not 2 BUT 11..
தந்நலமற்ற அன்பின் உறைவிடம் பெண்கள். தாயன்புக்கு நிகராக ஒருபோதும் எதையும் கூற இயலாது என்பது என் கருத்து, என் புரிதல். என் அனுபவம்.
கோபி சிங்( 75 வயது)என்பவர் தஞ்சாவூரை சேர்ந்தவர்
அண்மையில் திருக்குறள் முற்றோதல் தொடர்பாக அவரை நேர்காணல் செய்தோம் ..
அப்போது அவர் கூறினார் .. அவரது 10 ஆண்டு கால அனுபவத்தில் 68 பிள்ளைகளில் 2 பிள்ளைகள் தவிர மீதி உள்ள 66 பேருக்கும், அவர்களின் தாயே திருக்குறள் முற்றோதல் முடிக்கக் காரணம் என்றார்,.,
தாயன்பு காரணமாக பிள்ளைகள் சரியான திசையில் பயணிக்கின்றனர்…
Love… Selfless Love..It comes by nature to women.. it starts when a child takes shape in the womb..it can never be replicated by men..
சி இராஜேந்திரன்
வள்ளுவர் குரல் குடும்பம்
www.voiceofvalluvar.org
மீள் பதிவாக…