Skip to content

திரு. வேங்கை இளந்துறவி,காட்டுமன்னார் கோவில்

திரு. வேங்கை இளந்துறவி, காட்டுமன்னார் கோவில், கடலூர்

எல்லா வகையிலும் திருக்குறள் இயக்கம் வெற்றி பெறவேண்டுமென்று விரும்பி உதவி செய்யும் வள்ளல்கள் சிலர் தான் இருப்பர், அவர்களில் இவரும் ஒருவர். அத்துடன் தன்னும் ஏதேனும் நலப்பணி ஆற்றவேண்டுமென்று “காட்டுமன்னார் தமிழ்ச்  சங்கம்” என்ற அமைப்பை உருவாக்கி உழைப்பவர். வேங்கை இளந்துறவி என்று அழைக்கப்படும் அறிவியல் ஆசிரியர் பழனிச்சாமி.

திருவள்ளுவர் ஞானமன்ற மாநாடு தேவகோட்டையில் நடந்தபோது, பெண்ணாடத்தில் நடந்தபோதும் பல நண்பர்களையும் அழைத்து வந்து சிறப்பான சொற்பொழிவுகளை ஆற்றியவர். யாருமற்ற அனாதையாக ஒரு தமிழ்க் கவிஞர் வேல் வேந்தன், மறைந்துவிட்டாரே, அவருக்கு நாம் ஒரு நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்துவோமென்று  அவர் ஊரிலும், ஞானமன்றத்திலும் நடத்தியவர்.

தமிழும், தமிழ் பண்பாடும் காக்கப் படவேண்டும் என்பதோடு திருக்குறளும் திருக்குறள் இயக்கங்களும் வெற்றிப்பெறவேண்டும் என்று முனைப்போடு செயல்படுபவர். அதற்காகவே இரண்டு குறும்படங்களை எடுத்து வருபவர். வாகனங்களில் திருக்குறளை ஒட்டவேண்டும் என்றாலும், திருக்குறள் ஒட்டிகளை அச்சடித்துக் கொடுங்கள் என்றாலும் உடனடியாக நிறைவேற்றித்தருபவர். திரு. இரவிக்குமார் ஆற்றும் குறள் மலைச் சங்க பணிக்கு உதவி செய்யுங்கள் என்றவுடன் ரூ.5,000/- கொடுத்து உதவியவர். சமூக அக்கறை உள்ள எந்த நிகழ்வாயினும் வலியச் சென்று ஆதரிப்பவர். மதுவிற்கு எதிரான மக்கள் இயக்க நடைப்  பயணத்தை இரண்டு நாட்கள் காட்டுமன்னார் கோவில் பகுதிகளில் வரவேற்று விருந்தோம்பி அனுப்பி வைத்தவர்.

தான் ஒரு பெரிய மருத்துவமனையை நடத்தி வந்தாலும் தமிழ் அன்பர்களை நாடொறும் சந்தித்து உரையாடி ஏதேனும் செயல்திட்டங்களை உருவாக்கிக் கொண்டே இருப்பவர். இப்படி ஒரு திருக்குறள் தொண்டர் இருக்கிறார் என்பது தமிழகம் அறியப்பட வேண்டிய ஒன்று! வாழ்க அவர் தொண்டு!

 

நன்றி
தொகுப்பு
திருக்குறள் சி. பன்னீர்செல்வம்
மாவட்டக் கல்வி அலுவலர் ( பணி நிறைவு )
திருவள்ளுவர் ஞான மன்றம்
ஜெயங்கொண்டம்