Skip to content

வள்ளுவர் செங்கோன்மை அதிகாரத்தில் பத்துப் பாடல்களில் சிறப்பாக செங்கோல் ஆட்சி பற்றிக் கூறியுள்ளார்

செங்கோல்

வள்ளுவர் செங்கோன்மை அதிகாரத்தில்…
பத்துப் பாடல்களில் சிறப்பாக செங்கோல் ஆட்சி பற்றிக் கூறியுள்ளார் …

இதுவல்லாமல் மேலும் பல இடங்களில் கோல் பற்றி அவர் கூறுகிறார்

அதிகாரங்கள் 55,56,57,58
ஆழ்ந்து படிக்க வேண்டும்…

55 – செங்கோன்மை

56 – கொடுங்கோன்மை

57 – வெருவந்த செய்யாமை

58 – கண்ணோட்டம்

கோல் (12)
சமன் செய்து சீர் தூக்கும் கோல் போல் அமைந்து ஒரு-பால்
கோடாமை சான்றோர்க்கு அணி – குறள் 12:8

வான் நோக்கி வாழும் உலகு எல்லாம் மன்னவன்
கோல் நோக்கி வாழும் குடி – குறள் 55:2

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல் – குறள் 55:3

குடி தழீஇ கோல் ஓச்சும் மா நில மன்னன்
அடி தழீஇ நிற்கும் உலகு – குறள் 55:4

இயல்பு உளி கோல் ஓச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு – குறள் 55:5

வேல் அன்று வென்றி தருவது மன்னவன்
கோல் அதூஉம் கோடாது எனின் – குறள் 55:6

கூழும் குடியும் ஒருங்கு இழக்கும் கோல் கோடி
சூழாது செய்யும் அரசு – குறள் 56:4

இன்மையின் இன்னாது உடைமை முறை செய்யா
மன்னவன் கோல் கீழ் படின் – குறள் 56:8

கல்லார் பிணிக்கும் கடும் கோல் அது அல்லது
இல்லை நிலக்கு பொறை – குறள் 57:10

நுண்ணியம் என்பார் அளக்கும் கோல் காணும்-கால்
கண் அல்லது இல்லை பிற – குறள் 71:10

கேட்டினும் உண்டு ஓர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பது ஓர் கோல் – குறள் 80:6

எழுதும்-கால் கோல் காணா கண்ணே போல் கொண்கன்
பழி காணேன் கண்ட இடத்து – குறள் 129:5

கோலன் (1)
வெருவந்த செய்து ஒழுகும் வெம் கோலன் ஆயின்
ஒருவந்தம் ஒல்லை கெடும் – குறள் 57:3

கோலொடு (1)
வேலொடு நின்றான் இடு என்றது போலும்
கோலொடு நின்றான் இரவு – குறள் 56:2

நன்றி
http://tamilconcordance.in/kuraLconc-1-koo1.html

தொகுப்பு
சி இரா
www.voiceofvalluvar.org
26/05/2023