Skip to content

வலைத்தமிழ் பார்த்தசாரதி பதிவு

வலைத்தமிழ் பார்த்தசாரதி பதிவு

திருக்குறளோடு மூச்சுப் பயிற்சிகளை இணைத்த புதிய உத்தியோடு வெளிவந்திருக்கும் நூலாக இதன் ஆசிரியர் நண்பர் ஆராய்ச்சியாளர் முனைவர். சுந்தர் பாலசுப்பிரமணியன் https://pranascience.com/ குறிப்பிடுகிறார்..

திருக்குறளை 15 ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவின் தென் கரோலினா மாகாணத்தில் உள்ள பனை நிலம் தமிழ்ச் சங்க அன்பர்களை ஒருங்கிணைத்து திருக்குறளை மறையோதல் (மந்திரமாக) -chanting வடிவில் 1330 குறள்களையும்
https://www.youtube.com/playlist?list=PLXPD1_to_UjRHjPTTVdMxMlVtSfYiGuau
மிக நேரத்தியாக, இசையமைத்து கொண்டுவந்தவர்.

உலகில் 1330 திருக்குறளையும் மந்திரமாக, சரியான உச்சரிப்புடன், குறைந்த நேரத்தில் உருவாக்கப்பட்ட முக்கியமான முயற்சி இது. இதை வாசிங்டன் தமிழ்ச்சங்கம் உள்ளிட்ட பல தமிழ் அமைப்புகளில் திருக்குறள் மறையோதல் செய்து தமிழ் விழாக்களை தொடங்குவதை மரபாகக் கொள்ள இவரது பங்களிப்பே பெரிதும் ஊக்கம் தந்தது.

தமிழர்களின் மூச்சுப்பயிற்சியை உடல் நலத்திற்கும், நோய்களை தீர்க்கவும் எப்படி பயன்படுத்துவது என்று தொடர்ந்து ஆய்வு செய்து நூல்களை வெளியிட்டுவரும் ஆய்வாளர்.

அமெரிக்காவில் திருமூலர் தமிழிருக்கை அமைத்து சித்தர்கள் குறித்த அறிவியல் கண்ணோட்ட ஆய்வை விரிவாக்கவேண்டும் என்ற பெரும் கனவில் பயணிப்பவர்.

வாழ்த்துகள் சுந்தர்..

நூல்களை அமேசானில் வாங்க ..
https://www.amazon.com/Breathe-Little-Better-Pranayama-resilience/dp/B0CGVT42C6