Skip to content

திருக்குறள் பற்றி மேனாள் பாரதப்பிரதமர் வாஜ்பாய்.

மறைந்த பாரதப் பிரதமர் வாஜ்பாய்
பிறந்த நாள் 25 டிசம்பர்

(25/12/1924- 16/08/2018)

நக்கீரன் : இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட திருக்குறள் பற்றி உங்கள் கருத்து என்ன?

வாஜ்பாய் : தமிழ் மொழி மீதும், தமிழ் கவிதைகள் பற்றியும் எப்போதுமே எனக்கு மிக உயர்ந்த மதிப்பு உண்டு. எனினும் தமிழ்கவிதைகளை தமிழிலேயே படிக்க எனக்கு தெரியாது. இந்தியிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்ட தமிழ்கவிதைகளை பலவற்றை நான் படித்திருக்கிறேன். சமூக சீர்திருத்தம், ஆன்மிகம், தேசபக்தி, தமிழ் கலாச்சாரத்தின் பெருமை போன்றவைகளை விளக்கிடும் அந்த தமிழ் இலக்கியங்கள் அனைத்துமே தனித்தன்மை வாய்தவைகளாகா விளங்குகின்றன.

1996 மே மாதம் பா.ஜ.க. அரசு மீதான நம்பிக்கைத் தீர்மானத்தின் மீது நாடாளமன்றத்தில் நான் பேசியபோது மகாகவி பாரதியார் ‘எங்கள் தாய்’ என்ற தலைப்பில் பாடிய ‘முப்பது கோடி முகமுடையாள்; உயிர் மொய்ம்புறவொன்றுடை யாள்’ என்ற கவிதையை நான் மேற்கோள் காட்டினேன். அதை இன்னமும் பலர் நினைவுபடுத்தி பாராட்டிருக்கிறார்கள்.

திருவள்ளுவரைப் பொறுத்தவரையில் அவர் ஒரு கவிஞர் மட்டுமல்ல; அவர் தலை சிறந்த தத்துவஞானி, அவரது கவிதை வரிகள் வாழ்க்கையின் அனைத்துத் துறைகளுக்கும் வெளிச்சம் தரக்கூடிய வழிகாட்டியாகும். நான் எனது நூலகத்தில் அடிக்கடி திருக்குறளை எடுத்து படிக்கும் பழக்கம் உள்ளவனாகவே இருக்கிறேன்.

https://www.nakkheeran.in/special-articles/special-article/vajpayee-about-thirukkural-nakkheeran-exclusive-interview?amp