Skip to content

வாய்மை- வள்ளுவம்- டால்ஸ்டாய்- காந்தியடிகள்

டால்ஸ்டாயும் காந்தியும் தங்களது செயல்களின் மூலம் தங்களது கருத்துக்களின் உண்மைத் தன்மையை நிரூபித்து காட்டினார்கள்.

அவர்கள் போதித்த கருத்துக்கள் எல்லாம், யாரும் வாழ முடியாதவை அல்ல; மாறாக முயன்றால் எவரும் அந்த வாழ்க்கையை வாழ இயலும்

இருவரும் சமயங்களின் அடிப்படை உண்மைகள் ,சமயச் சான்றோர்கள் வரலாற்றுப் பேரறிஞர்களின் கருத்துக்கள் மூலம் தங்களது வாய்மை வழி வாழ்க்கைக்கு ஒளியூட்டினார்கள் . வாய்மை ஒன்று மட்டுமே உன்னதமானது என்று ஓங்கி உரைத்தவர்கள்.

டால்ஸ்டாய் கூறுவார், “என் எழுத்துக்களின் ராணி அவள்; நான் அவளை முழுவதுமாக நேசிக்கிறேன்; அவள் அன்றும் இன்றும் என்றும் பேரழகுப் பெண்; அவள்தான் வாய்மை. காந்தியடிகள் கூறுவார், “நான் ஒன்றுக்கு மட்டுமே அடிபணிபவன்; ஒன்றோடு மட்டுமே முற்றாக பொருந்தி வாழ்பவன்; அதுதான் வாய்மை.”

இவ்வாறு இருவரும் வாய்மை என்றஉன்னதமான விழுமியத்தை தங்கள் வாழ்வின் மையப்புள்ளியாகக் கொண்டு இயங்கினார் . அவர்களது எண்ணம் சொல், செயல் என்ற மூன்றுமே வாய்மையை ஆதரமாகக் கொண்டு அமைந்தன.
வள்ளுவர் கூறுவார்
யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற. ( 300)

யாம் உண்மையாக கண்ட பொருள்களுள் வாய்மைவிடத் எத்தன்மையாலும் சிறந்தவைகளாகச் சொல்லத்தக்கவை வேறு இல்லை.
— மு. வரதராசன்

திருக்குறளும் காந்தியடிகளும்
(தொடர் கட்டுரையிலிருந்து)
சி இராஜேந்திரன்

(கிராம ராஜ்யம். வர இருக்கும் பிப்ரவரி மாத இதழில்)