Skip to content

உலக புத்தக தின வாழ்த்துகள்

உலக புத்தக தின வாழ்த்துகள்

குறள் 1110 இல் வள்ளுவர் பயன்படுத்திய உவமை ,ஒரு ஒப்பற்ற உவமை.

தொடர் வாசிப்புக்கும் அறிவுத் தேடலுக்கும் உள்ள பிரிக்க இயலாது இணைப்பு எல்லோரும் அறிந்தது…

தொட்டனைத்து ஊறும்மணற்கேணி

அதுபோல….
கற்றனைத்து ஊறும்
அறிவு என்பார் வள்ளுவர்

இந்தக் குறள் கருத்தை
வள்ளுவர் காமத்துப்பாலில் பயன்படுத்துகிறார்

உலக இலக்கியங்களில் இது போன்ற ஒரு உவமை உண்டா என்று எனக்குத் தெரியவில்லை…

வாலியின் பாடல் வரிகள் …
காலத்தால் அழியாத காவிய வரிகள்..

Immortalised by TMS & Susheela Amma
and by MGR & Saroja Devi pair

திருக்குறள்: 1110

அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு.

மு.வரததாசனார் :
செந்நிற அணிகலன்களை அணிந்த இவளிடம் பொருந்துந்தோறும் காதல் உணர்தல்,நூற் பொருள்களை அறிய அறிய அறியாதமைக் கண்டாற் போன்றது.

The more men learn, the more their lack of learning they detect;
‘Tis so when I approach the maid with gleaming jewels decked.

தோண்டத் தோண்ட நீர் சுரந்து கொண்டே இருக்கும்

திருக்குறள் ….
ஒரு தொட்டனைத்து ஊறும்மணற்கேணி

காலம் தோறும் வற்றாத ஊற்றாய்…..
திருக்குறள்

சி இரா
www.voiceofvalluvar.org
23/04/23