Skip to content

திருக்குறளின் அற்புதங்கள்

புலவர் சி.முருகேசன்
தமிழாசிரியர் ஓய்வு

இவ்வாண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் முற்றோதலில் பங்கு பெற்று வெற்றி பெற்ற ஆறாம் வகுப்பு மாணவி ஹன்சிகா அவர்களின் தாத்தா இந்த புலவர் முருகேசன் ஆவார்.

இவரின் வழிகாட்டுதலாலே இந்த மாணவி அரசு நடத்திய திருக்குறள் முற்றோதலில் பங்கு பெற்று பரிசு பெற்றுள்ளார்.

இதேபோன்று இவரது மூத்த சகோதரனும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பரிசு பெற்றுள்ளார்.

இவர் திருக்குறள் மற்றும் நீதி நூல்கள் ஆகிவற்றை பயிற்றுவிப்பதில் ஆர்வம் மிக்கவராக உள்ளார்.

இலக்கணம் கற்பிப்பதிலும் உயர்ந்த ஈடுபாடு காட்டி வருகிறார்.

வெற்றி பெற்ற பிள்ளைகளை ,அவர்களின் வழிகாட்டியை, கண்டறிய வேண்டி மேற்கொண்ட கள ஆய்வில் இவருடைய ஊருக்கு நேரில் சென்று ஐயாவை வணங்கி ஒரு நூலும் துணிப்பையும் பரிசாக வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

விரைவில் அடுத்த கட்ட பணிகள் தொடங்கும்.

புலவர்.சி.முருகேசன் அவர்கள்

தொடர்பு
9943722519