Skip to content

தூத்துக்குடி மனநல மருத்துவர்,திரு விஐயரங்கன் முகநூல் பதிவு

தூத்துக்குடி மனநல மருத்துவர்,திரு விஐயரங்கன் முகநூல் பதிவு

சில ஆண்டுகளுக்கு முன் என்னிடம் 10 வயதான
சிறுவனை மனநல ஆலோசனைக்காக கூட்டி
வந்தனர்,,

அவன் நன்றாகப் படிப்பான்.பள்ளியில் அவனுக்கு
நல்ல பெயர்.பிரச்னை 10 வருடம் கழித்து அவன்
தம்பி பிறந்தபின்புதான்,,

அவனது தாயார் பிரசவத்திற்காக மருத்துவமனை
செல்ல,அவன் வழக்கம் போல பள்ளி சென்றான்
மாலை வீடு அவன் திரும்பியதும்

அவனது தாத்தா,கேலியாக உனக்கு பங்காளி
பிறந்துட்டான்னு சொல்ல,பங்காளினா என்ன,?
என தாத்தாவிடம் கேட்க,

தாத்தாவும் சிரித்துக்கொண்டே கேலியாக இனி
பங்களா,உப்பளம்,கார் மற்ற சொத்து எல்லாம்
உனக்கு பாதி,உன் தம்பிக்கு பாதி என்றதும்,

எனக்குதான் எல்லாம்,என் தம்பிக்கு தரமாட்டேன்
என்று அழுது கோபப்பட,தாத்தாவோ அதனை
சாதாரணமாக எடுத்துக்கொண்டார்,,

தம்பி பாப்பாவை பார்க்க விரும்பவில்லை,,!
மேலும் பள்ளிக்கு மறுநாள் செல்லவில்லை,
தனது அறையை விட்டு வெளியே வரவில்லை,!

தாயார் குழந்தையோடு வீட்டிற்கு வந்தபின்னும்
தம்பியை,தாயை பார்க்கவில்லை,,!பெற்றோரும்
அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை,!

அன்று இரவு எல்லோரும் உறங்கியபின் அவன் தன் தம்பியை கொலை செய்ய எண்ணி,வீட்டில்
இருந்த பெரிய மிக்ஸியை எடுத்தான்,,!

தம்பி இருந்த படுக்கை அறைக்கு சென்றான்,,!
அங்கு தரையில் படுத்திருந்த அவன் பாட்டியின்
மேல் விழ,சத்தம் கேட்டு முழித்தனர்,,!

லைட்டைப் போட்டு பார்த்தால்,திருதிருவென
அவன் விழித்து நிற்க,ஏன் மிக்ஸியை இங்கே
எடுத்து வந்தாய்,? எனக்கேட்க,

தாத்தா சொன்னமாறி,எதையும் தம்பிக்கு நான்
தரமாட்டேன்,,அவன் இருந்தாத்தானே தரணும்
அதனால அவனைக் கொல்ல வந்தேன் என்றதும்,

வீட்டில் எல்லோரும் மிகுந்தஅதிர்ச்சியடைந்தனர்
காலையில் என்னிடம் மனநல ஆலோசனைக்காக
அவனை தாத்தா அழைத்து வந்திருந்தார்,,!

அவரிடம் நடந்தவற்றை எல்லாம் கேட்டறிந்தேன்.
அவன் பாக்ஸிங் சேனல்,ஆக்‌ஷன் படங்கள்தான்
விருப்பமாக பார்ப்பதும் அறிந்தேன்,,

பின் அவனது தாத்தாவிடம்,நீங்கள் பேரனிடம்
தம்பியுடையான் படைக்கஞ்சான் எனக்கூறி
சொத்துக்களை அண்ணனும்,தம்பியும் சேர்ந்து

ஒற்றுமையாக பராமரிக்க வேண்டும் என்று நீங்க
கூறியிருந்தால்,பிறந்த தன் தம்பியிடம் அவன்
அன்போடு இருந்திருப்பான்,,

அவன் நாளும் பார்க்கும் பாக்ஸிங் சேனல் மற்றும்
சண்டைப்படங்கள்,அவனது பிஞ்சு மனத்தில்
கொலையுணர்வு எனும் நஞ்சை விதைத்துள்ளது!

அவன் தாத்தா,தான் விளையாட்டாக சொன்னது
வினையாகிப்போனது என எண்ணி வருந்தினார்.
நாம் எண்ணும் எண்ணங்கள்,சொற்கள் எல்லாம்
மந்திரம்,,உடல் என்பது யந்திரம்,,

வாழ்க்கை என்பது தந்திரம்,,குழந்தைகளைப்
பெற்றால் மட்டும் போதாது,,நற்பண்புகளை
கடைபிடிக்க வேண்டும்,வளரும் குழந்தைகளும்
பெரியவர்களது நற்பண்புகளை கற்பார்கள்,!
குழந்தைகள் சொல்வதை செய்வதில்லை,!
செய்வதைப் பார்த்து பழகி செய்கிறார்கள்,!!

நற்பண்புள்ள குழந்தைகள் வேண்டுமா,? முதலில்
நற்பண்புள்ள பெற்றோர்களாய் இருங்கள்,,