இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு.
(குறள் – 752)
Everyone despises the poor
While the rich are exalted by all.
தூத்துக்குடி மனநல மருத்துவர் விஜயரங்கன் அவர்களின் முகநூல் பதிவு 07/04/2023
23வருடங்களாக எனது பணத்தேவைகளை
என் மகள்தான் பார்த்துக்கொள்கிறாள்,,
என்னிடம் கையில் பணமே இருக்காது!
அப்பா! நம்ம மருத்துவமனை ஊழியர்கள் பலர்
மதுரை,கொடைக்கானல் பார்த்ததே இல்லை,!
எனவே அவர்களையும் கூட்டிச்செல்வோம்,,
7 வருடங்களுக்கு முன் மகள் கூறியபடி நாங்கள்
மற்றும் எங்க மருத்துவமனை ஊழியர்கள் என
40பேர் கொடைக்கானல் சுற்றுலா சென்றோம்,,!
மகள் என்னிடம் நாம் மட்டும் அங்கு வசதியான விடுதியில் தங்கக்கூடாது,,நமது ஊழியர்கள்
தங்கும் விடுதியில் நாமும் தங்க வேண்டும்ப்பா!
மகளே அவ்வாறு ஒரு விடுதியை ஏற்பாடு செய்ய,
நான் காலை கொடைக்கானல் ஏரியைச் சுற்றி
ஓடுவதற்கு கிளம்பினேன்,,
அப்பா! உங்க டிராக்சூட்டில் ₹500 நான் வைத்து
இருக்கிறேன்,,நீங்க ஜாகிங் முடிந்தவுடன்,காலை
டிபன் சாப்பிட்டுவிடுங்கள் எனக்கூற,
நானும் ஓடி முடித்தவுடன்,அங்குள்ள ஓர் பிரபல
சைவ உணவகத்தில் சிற்றுண்டியை முடித்தேன்,,
அங்குள்ள சர்வர் ₹ 220 க்கு பில் தந்தார்,
நான் வழக்கமாக பணம் வைக்கும் இடத்தில்,
பணம் இல்லை,!! என்ன செய்வது,,? ஓடுகையில்
பணம் விழுந்திருக்கும் என நினைத்தேன்,,
காத்திருந்த சர்வரிடம்,பணம் இல்லை எனக்கூறி
எதிரில் உள்ள விடுதியில்தான் தங்கியுள்ளோம்,,
நான் போய் பணம் எடுத்து வருகிறேன்,,அதுவரை
என் விலைஉயர்ந்த கைக்கடிகாரத்தை தர்றேன்!
எனக்கூற,சர்வர் என்னை எரிச்சலாக பார்த்து,
பணம் தராமல் போகக்கூடாது என எச்சரித்து
உணவகத்தின் மேலாளரிடம் கூற,அவர் உடனே
என்னை கேவலமாக முறைத்து பார்க்க,உலகில்
கையில் பணமில்லைனா அவமானந்தான்ங்க!
எனது கையைக்கழுவிய பின்,மீண்டும் எனது
டிராக் சூட்டின் பின்பக்கத்தில் ஈரத்தை துடைக்க
அங்கே உள்ள பையில் ₹ 500 இருந்தது,,!
உடனே எனக்கு உயிர்வந்தது,,புதுக்கரன்ஸியை
இருந்த இடத்தில் இருந்து காட்ட,மேலாளர்
சர்வர் முகங்களில் பணிவு தெரிந்தது,,
சர்வரிடம் ₹ 500 கொடுத்துவிட்டு,நான் நடக்கத்
தொடங்கினேன்,,மீதி பணமோ ₹ 280 ,,அந்த
சர்வர் என் பின்னால் ஓடிவந்தார்,
என்னிடம் மிகவும் பணிந்து பணத்தை கொடுக்க,
அவரிடம் பணம் கையில் இல்லை என்றால் இந்த
உலகம் எப்படி பார்க்கும்,? என்பதை
நீங்களும்,உங்க மேலாளரும் என்னை பார்த்த
பார்வையால் புதிய அனுபவம் இங்கு பெற்றேன்!
அதற்காக இந்தமீதிப்பணம் உங்க இருவருக்கும்!
எனக்கூறி நான் வெளியேறினேன்,,தங்கியிருந்த
அந்த இரு நாட்களும் 40 பேரும் அங்குதான்
சாப்பிட்டோம்,,
எனக்கு அவர்கள் மரியாதை தருவதைப்பார்த்து
நான் மருத்துவன் என்பதை விசாரித்து அவர்கள்
அறிந்து,கூனிக்குறுகினர்,,
அவர்களிடம் பின்னர்,யாராவது வயதானவர்கள்
என்னைப்போல பணம் இல்லாமல் இங்கு வந்து
உணவருந்தினால்,பாவம் என விட்டுவிடுங்கள்!
இவ்வளவு பேர் பணம் கொடுத்து உணவருந்த,
ஒரு வயதான ஏழை பணமில்லாமல் வரட்டுமே!
அவருக்கு இலவசமா உணவளியுங்கள், !
அந்த உணவகத்தின் பங்குதாரர் என் நண்பர்
அதைப்பற்றி அவர்களிடம் நான் கூறவில்லைங்க!
அந்தப் பணம் படுத்தும் பாடு,,அப்பப்பா,,உலகில்
அந்தப் பணமில்லா மனிதன் பிணந்தாங்க!
அன்று அனுபவத்தில் கண்ட உண்மைங்க!!