Skip to content

பிரயாக்ராஜ் ரயில் நிலையம் எதிரில் திருவள்ளுவர் சிலை: தமிழ் அதிகாரியின் முயற்சியால் நிறைவேறிய 34 ஆண்டு கால கோரிக்கை

https://www.hindutamil.in/news/india/1355221-thiruvalluvar-statue-opposite-prayagraj-railway-station.html?

பிரயாக்ராஜில் மகா கும்பமேளா ஏற்பாடுகளுக்கான உயரதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டங்கள் கடந்த ஆண்டு நடைபெற்றன. இவற்றில் ஆன்மிக வடிவங்களான பிரம்மா, கருடா, அறிஞர்களான வால்மீகி, ரவீந்திரநாத் தாகூர், மன்னர்களான ஹர்ஷவர்தன், அகல்யாபாய் ஹோல்கர் உள்ளிட்டோருக்கு என 15 சிலைகள் அமைக்க திட்டமிடப்பட்டது.

பிரயாக்ராஜ் டிஐஜியான தமிழர் என்.கொளஞ்சியின் முயற்சியால் இந்தப் பட்டியலில் திருவள்ளுவர் சிலையும் சேர்க்கப்பட்டு, கும்பமேளாவின்போது நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் 34 ஆண்டு கால கோரிக்கை தற்போது நிறைவேறியுள்ளது.