அனைவருக்கும் அன்பு நிறை வணக்கம்
வள்ளுவம் போற்றுதும்!
கன்னியாகுமரியில் ஐயன் திருவள்ளுவர் சிலை நிறுவிய (25வது ஆண்டு) வெள்ளிவிழா ஆண்டை கொண்டாடும் வகையில் மாநிலம் முழுவதும் பல திருக்குறள் நிகழ்ச்சிகளை அரசு முன்னெடுத்து வருகிறது .
அந்த வகையில் அரசு ஊழியர்களும் மற்றும் ஆசிரியர்களும் பங்கு கொள்ளும் மாநிலம் தழுவிய குறள் வினாடி வினா போட்டி நடத்தப் பெற்றது. அதை நடத்தும் பொறுப்பு விருதுநகர் மாவட்டம் ஆட்சியர் வி ப ஜெயசீலன் இஆப அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அவர் தலைமையில் செயல்பட்ட ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகம் மெய் வருத்தம் பார்க்காமல் , பசி நோக்காமல் ,கண் துஞ்சாமல் , ஓவாமல் நீள் வினை ஆற்றியது, கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
கல்வித்துறையோடு கைகோத்து பல்துறை சேர்ந்தவர்கள் குறள் வினாடி வினா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்
இரு தரப்பினரும் இணைந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது மனத்திற்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது .
ஆசிரியர்கள் மட்டுமல்லாமல் அரசு ஊழியர்களும் குறள் கற்க வேண்டும் என்ற தந்தை பெரியாரின் கனவு படிப் படியாக நிறைவேறுகிறது.
இந்த வினாடி வினா நிகழ்ச்சி மிகத் திறம்பட தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்தின் இணை இயக்குநர் திரு சங்கர சரவணனால் சவடிவமைக்கப்பட்டு விருதுநகர், மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் வழி காட்டுதலில் அவர்களின் குழுவால் மிகத் திறம்பட அரங்கேற்றப்பட்டது .
விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள பேரரங்கில் ,காலை 10 மணி தொடங்கி மாலை 8 மணி வரை நடந்த இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் முழுவதும் கலந்து கொண்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது . அவர் 2003 லேயே 1330 குறளும் மனனம் செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அவரோடு தோளோடு தோள் நின்று உழைத்தவர்கள் திரு தண்டபாணி ,திருமதி அனிதா ,திரு ரா ராஜேந்திரன் ,திரு ரமேஷ் போன்ற பல உதவி ஆட்சியர்கள் . எங்களுக்கான ஏற்பாடுகளை கவனித்தவரகள் சரவணன் , உதவி வட்டாட்சியர், முத்து முருகன் , வருவாய் ஆய்வாளர்.
அவர்களுக்கு வள்ளுவர் குரல் குடும்பத்தினரின் நன்றியும் பாராட்டும் வாழ்த்தும்.
போட்டியாளர்கள் 500 பேர் உட்பட
கிட்டத்தட்ட ஆயிரம் பேர் இந்த நிகழ்ச்சியில்
28/12/24 அன்று கலந்து கொண்டனர்.
முதல் பரிசு திருப்பூர் மாவட்டத்திற்கும்
இரண்டாம் பரிசு தருமபுரி மாவட்டத்திற்கும்
மூன்றாம் பரிசு திருநெல்வேலி மாவட்டத்திற்கும் கிடைத்தது
இறுதிச் சுற்றில் பங்கேற்ற மற்ற மூன்று மாவட்டங்கள்… தேனி விருதுநகர் கரூர் மாவட்டத்தினர்
போட்டியாளர்களிடம் ,அறம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட வள்ளுவர் குரல் குடும்பத்தில் டெலிகிராம் தளத்தில் இணைய ஒரு அழைப்பை விடுத்தேன் .
அந்த அழைப்பை ஏற்று பலர் இணைந்து கொண்டிருக்கின்றனர் இன்னும் இரண்டு நாட்களுக்கு இந்த இணைப்பு இருக்கும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்
வள்ளுவர் குரல் குடும்பத்தில் ஏற்கனவே 3 பேர்
“நாளும் ஒரு குறள்” பதிவு செய்வதால் , மேலும் அது போன்ற பதிவுகள் செய்வதை முற்றாகத் தவிர்க்க வேண்டும் .. அந்த குறள் குறித்த வாழ்வியல் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாம்.
திருக்குறள் பரவலாக்கம் குறித்தும் ,திருக்குறள் மனன முற்றோதல் குறித்தும் ,மற்றும் திருக்குறள் சார்ந்த அவர்களது படைப்புகள் குறித்தும் வள்ளுவர் குரல் குடும்பத்தினர் பதிவுகள் இடலாம் .அதைத் தவிர எந்த விதமான பதிவுகளையும் அங்கே பதிவிடக் கூடாது.
தொடர்புக்கு voiceofvalluvar1330@gmail.com
இணைந்து பயணிப்போம்!
குறளறம் விதைப்போம்!!
மனிதம் வளர்ப்போம்!!!
முழு காணொளியைப் பார்த்து மகிழுங்கள்,