Watch this video on Facebook
https://www.facebook.com/story.php?story_fbid=10228001949606383&id=1002510723&mibextid=WC7FNe
திருக்குறளின் வேர்கண்டு வாழ்முறை ஆக்குவோம். தமிழராக நிமிர்வோம்.
அற்றம் மறைக்கும் பெருமை சிறுமை தான் குற்றமே கூறிவிடும்… (எண் 980).
இந்தக் குறளில் அற்றம் என்ற சொல் மிகச் சிறப்பாக இடம் பெற்றுள்ளது. குற்றம் என்று எழுதி இருக்கலாம் அல்லவா? அற்றம் என்றால் அற்ற செயல்கள், நல்லவை அல்லாத செயல்கள். இவற்றைச் சரி செய்து விடலாம். இவற்றை மறைப்பது பெருமை. குற்றச் செயல்களை மறைப்பது பெருமை அல்ல, சிறுமை.
சிறுமையுடையவர்கள் தேடித் தேடி ஒருவருடைய குற்றங்களை மட்டுமே கண்டுபிடித்து வெளிச்சம் போட்டுக் காட்டுவார்கள். எனவே குற்றங்களை அலசி ஆராய்ந்து கண்டு பிடித்து அதனை முன்னிலைப்படுத்தாமல் ஒருவருடைய நல்ல தன்மைகளை காட்சிப்படுத்த வேண்டும் என்பதுதான் இந்தக் குறளின் அடிப்படையாக அமைந்துள்ளது. “அற்றம்” என்ற சொல்லில் வள்ளுவர் மிகப்பெரிய நுட்பத்தைப் பொதிந்து வைத்துள்ளார்.
அற்றம் என்ற சொல் 421 (கேடு), 434 (முடிவு), 846 (மறைத்தற்குரிய பகுதி), 1186 (நேரம்), 980 (குற்றம் என்று பொருள் தராது) (அற்ற+அம்=அற்றம்) அற்ற செயல்கள் ( ஒழுங்கற்ற, பண்பற்ற, அறிவற்ற என இது பரந்து விரிவடையும். இந்த “அற்ற” செயல்கள் கல்வியினாலோ, பயிற்சியினாலோ, சரி செய்யலாம். எனவே இந்த அற்ற செயல்களைச் சுட்டிக் காட்டி ஒருவரைக் கீழ் இறக்கக் கூடாது. இன்றைய சூழலில் வள்ளுவர் சொன்னார் என்று ஒருவரின் குற்றச் செயல்களை மறைத்து, பொய்மையை பெருமை எனப் பேசுவதே இயல்பாகக் காணப்படுகிறது. குற்ற செயல்களை சுட்டிக் காட்ட வேண்டும். அற்ற செயல்களைத் தான் மறைக்க வேண்டும். பெருமைக்குரியவர் இதைத்தான் செய்வார். இதைத்தான் வள்ளுவர் “அற்றம்” என்ற சொல்லில் நுட்பமாகப் பதிய வைத்துள்ளார்.
அற்ற செயல்களைச் சுட்டி சுட்டி மாணவர்களைக் கீழ் இறக்காமல் அற்ற செயல்களை மறைத்து, அற்ற செயல்களை மாற்றுவதற்கான அடித்தளத்தை ஈடுபாட்டுடன் ஊக்குவித்து வழி நடத்துவது தான் பெருமை மிகுந்த ஆசிரியர்களின் உயர்ந்த செயற்பாடாக அமைகிறது.