Skip to content

உலகத் திருக்குறள் மொழிபெயர்ப்புத் திட்டம்

 

உலகத் திருக்குறள் மொழிபெயர்ப்புத் தொகுப்புத் திட்டக்குழுவின் “Thirukkural Translations in World Languages” நூல் நேற்று ஈரோட்டில் பல நாட்டின் அயலக நண்பர்களுக்கும், விழா விருந்தினர்களுக்கும் வழங்கப்பட்டது.

சொல்வேந்தர் திரு.சுகி சிவம்
எழுத்தாளர் திரு. திருப்பூர் கிருஷ்ணன்
இசையமைப்பாளர் திரு.ஜேம்ஸ் வசந்தன்
திரு.ஜெ.பாலகிருஷ்ணன், பிரான்ஸ்
திரு.சிவ.குறள் இனியன் , அயர்லாந்து
திரு.ஞானமுருகன் , ஐரோப்பா
திரு.ச.கமலக்கண்ணன் , சப்பான்
திரு.கோ.வி.சரவணன், தென்கொரியா
முனைவர்.முகமது ரஃபில் , உகண்டா
திருமதி.நாச்சியார் , தான்சானியா
மருத்துவர்.மு.செம்மல், சௌதி அரேபியா
திரு. கவிஞர் ம.அன்பழகன் , சிங்கப்பூர்
மருத்துவர் செ.மு.தி.ராஜன் , அமெரிக்கா

விரைவில் பல்வேறு நாடுகளிலும் அமெரிக்காவின் பல மாகாணங்களிலும் இந்நூல் அறிமுகவிழா நடைபெற திட்டமிடப்படுகிறது. இந்த பரப்புரையில் வழியே இன்னும் மொழிபெயர்க்கப்படவேண்டிய உலக அலுவல் மொழிகளாக அடையாளம் காணப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ள 158 மொழிகளில் திருக்குறளை மொழிபெயர்க்க செம்மொழி ஆய்வு நிறுவனம், தமிழ்நாடு அரசு முன்னெடுத்துள்ள திருக்குறள் மொழிபெயர்ப்பு மொழிகளைத் தாண்டி மீதம் உள்ள மொழிகளையும் 2030க்குள் செய்துமுடிக்க அந்தந்த நாடுகளின் தமிழ்ச்சங்கங்கள், தமிழ் அமைப்புகளின் கவனத்திற்கு கொண்டுசென்று அவர்களது செயல்திட்டமாக்க தொடர் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

https://www.facebook.com/share/PGdWCZaV8yV8RWBC/?mibextid=WC7FNe

நூலைப் பெற:https://estore.valaitamil.com/

உங்கள் நாடுகளில் திருக்குறள் நூல் அறிமுக விழா நடத்த தொடர்புகொள்க.