Skip to content

உலக மொழிகளில் திருக்குறள்

கனடாவில் 09/11/24 அன்று உலகத் திருக்குறள் மொழிபெயர்ப்புத் தொகுப்புத் திட்டத்தின் ஆய்வு அறிக்கை நூலான “Thirukkural Translations in World Languages” என்ற ஆங்கில நூலை , நூலாசிரியர் குழுவிலிருந்து நான் நேரில் கலந்துகொண்டு கனடா வாழ் தமிழ்ச்சமூகத்திற்கு அறிமுகப்படுத்தி உரையாற்றினேன்.

இந்த சிறப்பான நிகழ்வை ஏற்பாடு செய்த கனடியத் தமிழர் பேரவை அமைப்பிற்கும், அன்பிற்குரிய நண்பர்கள் . சிவன் இளங்கோ ,சுதர்ஷன் , இராஜு⁩, செல்வம் , உள்ளிட்ட அனைத்துத் தமிழ் ஆர்வலர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்

இந்த நிகழ்வில் “உலக மொழிகளில் திருக்குறள்” புத்தகத்தின் அதிகாரபூர்வ வெளியீடு இடம்பெற்றது.

அறிமுக உரை:
திரு சிவன் இளங்கோ
முதல் பிரதிகள் பெற்றவர்:
திரு. வேலுப்பிள்ளை தங்கவேலு
டாக்டர் இளையதம்பி பாலசுந்தரம்
திரு. குமார் ரத்னம்

நூலின் பின்னணி , உள்ளடக்கம் மற்றும் யுனெஸ்கோ வாயிலாக உலகளவில் திருக்குறளை மேம்படுத்த தமிழ் சமூகத்தினரும் அரசாங்கங்களும் எவ்வாறு ஆதரிக்கலாம் என்பதற்கான பரிந்துரைகளும் விவரிக்கப்பட்டன.

இதையடுத்து, “திருக்குறள்: அர்த்தமுள்ளதாக, பயனுள்ளதாக மற்றும் மகிழ்ச்சியான வாழ்வுக்கான கையேடு.” Thirukkural: An SOP for Meaningful Effective and Joyful living என்ற தலைப்பில் எனது உரை அமைந்தது.

பங்கேற்றவர்கள் , எனது உரை குறளின் ஆழமான பார்வையை வழங்கியதாகவும், பல வெண்பாக்களுக்கு தெளிவானவிளக்கம் கிடைத்ததாகவும் கருத்துத் தெரிவித்தனர். இந்த நிகழ்வில் டொராண்டோ வாழ் தமிழர்கள் பலரும் பங்கேற்றனர்.

“Thirukkural Translations in World Languages”
வலைத்தமிழ் பதிப்பகம் வெளியீடு , முழு வண்ணம் , 212 பக்கங்கள்.வலைத்தமிழ் இணையதளத்தின் மூலமாக நூலைப் பெறலாம்.

வள்ளுவர் குரல் குடும்பம் (VoV family) என்பது “அறம்” என்பதை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூகத்தை உருவாக்க செயல்படும் ஒரு அமைப்பு ஆகும்.

சி. இராஜேந்திரன்
www.voiceofvalluvar.org
ஆசிரியர்:
திருக்குறள் உவமை நயம் (2007)
பாமரருக்கும் பரிமேலழகர் (2018)
இணைந்து எழுதியது:
உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகள்(2024) ஆங்கில நூல்

https://www.facebook.com/share/p/18c2Vnej8L/?