Skip to content

திருக்குறள் முற்றோதலுக்கு மாணவர்களை தயார் செய்வது நமது கடமை ஒளவை ந அருள்

தினமணி – 13 8 2023
பக்கம் எண் : 4

திருக்குறள் முற்றோதலுக்கு மாணவர்களை தயார் செய்வது நமது கடமை
ஒளவை ந அருள்

சென்னை, ஆக. 12:

திருக்குறள் முற்றோதலுக்கு மாணவர்களை தயார் செய்வது நமது கடமை என தமிழ் வளர்ச்சி துறை இயக்குநர் ஒளவை ந.அருள் தெரிவித்தார்.

நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டத்தில் உலகத் திருக்குறன் மையம் சார்பில் பேராசிரியர் கு.மோகனராசுவின் 76 – ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது :

பேராசிரியர் கு.மோகனராக 76 வயதானாலும் திருக்குறளை பரப் புவதற்காக அவர் ஆற்றும்
பணியின் வேகம் சிறிதளவும் குறையவில்லை.

திருக்குறளின் 77-ஆவது அதிகாரம் போல படை மாட்சியுடன் திருக்குறளை உலகெங்கும் பரப்பும் பணியில் மேலும் ஈடுபட வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறேன்.

திருக்குறளை உலகெங்கும் பரப்புவதற்காக தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.

அதில் யுனெஸ்கோவின் அங்கீகாரம் கிடைக்கும் வகையில் யுனெஸ்கோ அரங்கில் மாநாடு நடத்தும் தீர்மானம்.அன்மையில் சட்டப்பேரவை நிறைவேற்றப்பட்டது.

மேலும், திருக்குறள் முற்றோதல் செய்யும் மாணவர்களுக்கு பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால்,இதில் தமிழகத்திலிருந்து போதுமான மாணவர்கள் கலந்துகொள்வதில்லை.

தில்லி, மும்பை ஆகிய இடங்களிலிருந்து மாணவர்கள் திருக்குறள் முற்றோதலில் கலந்து கொள்ள ஆர்வத்துடன் உள்ளனர்.

தமிழகத்தில் திருக்குறள் முற்றோதலுக்கு மாணவ – மாணவியர்களை தயார் செய்வது நமது கடமையாகும்.

பள்ளி மாணவர்களிடையே திருக்குறளைக் கொண்டு செல்ல நாம் தான் முயற்சி செய்ய வேண்டும் என்றார் அவர்.

இந்த விழாவில், முனைவர்கள் ஒளவை தாமரை, சிவலட்சுமி ,ரமேஷ்குமார், இரா.திருமூர்த்தி, வள்ளுவர் குறள் குடும்பம் நிறுவனர் சி.இராசேந்திரன், கவிமாமணி குமரிச்செழியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.