செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம், தமிழ் செவ்விலக்கியங்களின் சிறப்பை, பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்தும், ஆய்வு செய்தும், பரவலாக்கும் பணிகளை செய்து வருகிறது.
இதன்படி, திருக்குறள் 36 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது. மேலும், பார்வையற்றோர் படிக்கும் வகையில், 41 செவ்வியல் நுால்களை, பிரெய்லி வடிவிலும் அச்சிட்டு வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், காதுகேளாதோரும், திருக்குறளை புரிந்துகொள்ளும் வகையில், திருக்குறளுக்கான முன்னுரை, குறள், விளக்கம் ஆகியவற்றிற்கு, குரல் வழி உச்சரிப்புக்கு ஏற்ப, சைகை மொழியிலும், வீடியோக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இவை, விரைவில் வெளியிடப்படும் என, செம்மொழி தமிழாய்வு நிறுவனம் தெரிவித்து உள்ளது.