பாடல் : கண்ணதாசன்
இசை : கே வி மகாதேவன்
குரல்: டி எம் சௌந்தரராஜன்
படம் : வேட்டைக்காரன் (1964 )
திரையில்: எம் ஜி இராமச்சந்திரன்
வெள்ளி நிலா முற்றத்திலே
விளக்கெரிய விளக்கெரிய
உள்ளமெனும் தாமரையில்
உனை எடுத்து கொண்டுவந்தேன்
கொண்டு வந்தேன் ஹோய்
(வெள்ளி நிலா முற்றத்திலே )
வேலெடுக்கும் மரபிலே
வீரம் செறிந்த மண்ணிலே
வேலெடுக்கும் மரபிலே
வீரம் செறிந்த மண்ணிலே
பால் குடிக்க வந்தவனே
நடையை காட்டு
வரும் பகைவர்களை வென்று விடும்
படையை காட்டு
(வெள்ளி நிலா முற்றத்திலே)
முக்கனியின் சாறெடுத்து
முத்தமிழின் தேன் எடுத்து
முக்கனியின் சாறெடுத்து
முத்தமிழின் தேன் எடுத்து
முப்பாலிலே கலந்து
எப்போதும் சுவைத்திருப்பாய்
முப்பாலிலே கலந்து
எப்போதும் சுவைத்திருப்பாய்
நான்கு பேர்கள் போற்றவும்
நாடு உன்னை வாழ்த்தவும்
நான்கு பேர்கள் போற்றவும்
நாடு உன்னை வாழ்த்தவும்
மானத்தோடு வாழ்வது தான்
சுயமரியாதை
நல்ல மனமுடையோர் காண்பதுதான்
தனி மரியாதை
(வெள்ளி நிலா முற்றத்திலே)
என்ன ஒரு அருமையான சிந்தனை…..