திருக்குறளும் வாழ்க்கை விளையாட்டும்
நண்பர் கதிரவன் Kathiravan எழுதிய நல்ல கட்டுரை…
15 ஆண்டுகளுக்கு முன்னால் கால்பந்து ஆட்டம், கோவை
11 ஆண்டுகளுக்கு முன் டேபிள் டென்னிஸ் அறை சென்னை
தொடங்கி வைக்கும்போது நான் கூறியது
வாழ்க்கையை விளையாட்டு போல எடுத்துக் கொள்ள வேண்டும்
விளையாட்டை வாழ்க்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும்
அப்போதுதான் இரண்டிலும் வெற்றி பெற முடியும்
வாழ்க்கை விளையாட்டாக எடுத்துக் கொள்வது என்பது
வாழ்க்கையை கவனமாக
அணுக வேண்டும்
வெற்றி தோல்விகள் சகஜம்
வெற்றிக் களிப்பில் மிதக்க கூடாது
தோல்வியில் துவண்டு போய்விடக்கூடாது
புகழ் போதை தலைக்கு ஏறக் கூடாது
விதிகளுக்கு உட்பட்டு நாம் விளையாட வேண்டும்
விதி மீறினால் அதற்குரிய தண்டனையை நாம் அனுபவிக்க வேண்டும்
திருக்குறள் நமக்கு வாழ்வியல் விதிகளை வகுத்துத் தருகின்றது..
அதன் துணைக் கொண்டு
வாழ்வை
எதிர் கொள்ள வேண்டும்
இல்லை இல்லை……
விளையாட வேண்டும்