அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் 1 கோடி ரூபாய் நிதியத்தில் ஏற்படுத்தப் பெற்றுள்ள திருக்குறள் இருக்கையின் தகைசால் பேராசிரியராக முனைவர் சோ.ந. கந்தசாமி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக மாண்பமை துணைவேந்தர் முதுமுனைவர் இராம.கதிரேசன் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் அண்ணாமலைப் பல்கலைக்கழக இந்திய மொழிப்புல முதன்மையர் முதுமுனைவர் அரங்க.பாரி அவர்களும், தமிழியல் துறைத் தலைவர் முனைவர்
கோ. பிலவேந்திரன் அவர்களும், பேராசிரியர் சோ.ந.கந்தசாமி அவர்களின் தஞ்சாவூர் இல்லம் தேடிச் சென்று பணி நியமன ஆணையை வழங்கினர்.