திரு. இரா.பே.இராசப்பா அவர்களுடைய தந்தையார் திரு.கரு. பேச்சிமுத்து(79வயது) அவர்கள் (30.08.2023 இரவு 8.30) இயற்கை எய்தினார்.
ஐயா கரு.பேச்சிமுத்து அவர்கள் திருச்சி_ பாரத மிகுமின் ஆலையில் துணை பொது மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழின்பால் ஆழ்ந்த ஈடுபாடும் பற்றும் கொண்டு பணி ஓய்வு காலத்தில் திருக்குறள் பரப்புரையை தன் வாழ்நாள் பணியாக மேற்கொண்டார் .
அது மட்டுமன்றி “அகரூர் கல்வி அறக்கட்டளை என்கின்ற” அமைப்பை நிறுவி “இல்லம் தோறும் திருக்குறள்” என்கின்ற உயரிய நோக்கில் ‘திருக்குறள் மற்றும் ஏழிளந்தமிழ்”ஆகியவற்றை தொகுத்து இலவயமாக மாணவர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் அளித்து தமிழ் பணியாற்றினார்.
தமிழை பிழையின்றி எழுதுவதற்கு “பிழை தவிர்” என்ற ஒரு நூலையும் வெளியிட்டு பரப்பினார்.
ஐயா கரு.பேச்சிமுத்து அவர்களது விழிகள் கொடையாக அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் அவரது உடலும் எவ்வித மதச் சடங்குகளும் இன்றி அரசு மருத்துவமனைக்கு
நாளை மறுநாள் காலை(01.09.23)அளிக்கப்பட உள்ளது.
வாழ்வாங்கு வாழ்ந்து நிறைவெய்திய ஐயா கரு.பேச்சிமுத்து அவர்களுக்கு வீரவணக்கம்.
ஐயாவை நன்கு அறிவேன்..
… வள்ளுவம் பரவலாக்கத்தில் பெரும் பங்கு ஆற்றினார்..
குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்
தொடர்புக்கு…இரா.பே.இராசப்பா
98424 52887