‘திருக்குறளை ஒப்பித்தால் சர்பத் இலவசம் என்ற விளம்பரப் பதாகை வைத்தார்கள், அங்கு மாணவ மாணவிகள் குவிந்துவிட்டனர்.
தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள பாத்திமா நகரில் ‘எஸ். எஸ்.வாசன் என்றசர்பத் கடையில் செப்டம்பர் மாதத்தில் இருபத்து ஒரு நாட்கள் இந்தச் சலுகையை கடை உரிமையாளர்கள் சீனிவாசன், சிவாஜி கணேசன் அளித்தனர்.
இதுகுறித்து சீனி சீனிவாசனிடம் பேசிய போது…
“இந்தப் பகுதியில் எனது அப்பா பத்து ஆண்டுகளாக, சர்பத் கடையை நடத்தி வந்தார். நான் எம்.காம் படித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவந்தேன்.
பிபிஏ படித்ததம்பிக்கு நிதி நிறுவனம் ஒன்றில் வேலை. அப்பா இறந்ததும் சர்பத் கடையை தொடர்ந்து நாங்கள் இருவருமே தடத்த முடிவு செய்தோம்.
எனது அப்பா நடிகர் சிவாஜியின் ரசிகர் என்பதால்,எனது தம்பிக்கு சிவாஜி கணேசன் என்று பெயர்வைத்தார்.
அப்பாவின் பிறந்த நாளுக்கு என்ன செய்ய லாம் என்று நினைத்தபோது ‘பள்ளி மாணவ, மாணவியர்கள் மனப்பாடம் செய்து 5 திருக்குறள்களை ஒப்புவித்தால் ஒரு சர்பத்… 10 குறள்களை ஒப்புவித்தால் ஒரு பால் சர்பத்… 20 குறள்களை ஒப்பிவித்தால் ஒரு மில்க் ஷேக் என்று அறிவித்தோம்.
ஒரு நாளைக்கு ஒரு மாணவன் ஒரு முறைதான் திருக் குறளை ஒப்புவிக்க வேண்டும் என்பது மட்டும்தான் விதி. எங்கள் கடையில் 40 வகையான பானங்கள் கிடைக் கும். அதில் பாதாம் பிசின் போட்டு தயாரிக்கும் ஷேக் சிறப்பானது.
எங்கள் பகுதியில் நான்கு பள்ளி கள் உள்ளன. அறி விப்பைப் பார்த்ததும் மாணவ மாணவியர் கடைக்குப் படை எடுத்தனர்.
தொடக்கத்தில் பலரும் திக்கித் திணறி குறள்களைச் சொல்ல ஆரம்பித்தார்கள். சில நாள்களில் பெரும்பாலான மாணவர்கள் 5 குறள்களைத் தெளிவாகச் சொன்னார்கள். சிலர் 10, 20 குறள்கள் என்று முன்னேறினார்கள்.
பேருந்தில் தனது தந்தையுடன் பயணம் செய்து கொண்டிருந்த பட்டுக்கோட்டையைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவன் கடைக்குவந்து நூறு திருக்குறளை ஒரே மூச்சில் ஒப்புவித்தான். அவனைப்பாராட்டும் விதமாக பொள்ளாடை போர்த்தி திருக்குறள் புத்தகத் தையும் பேனாவையும் வழங்கினோம். மில் ஷேக் மாணவனுக்கும், அவனது தந்தைக்கும் சேர்த்து வழங்கினோம்.
சில உள்ளூர் மாணவர்கள் தினமும் 20 திருக்
குறள்களை ஒப்புவித்து தினமும் மில்க் வேடிக் பருகிளர். எங்கள் முயற்சியைக் கேள்விப்பட்ட சபரி
என்பவர் திருக்குறனை ஒப்புவிக்கும் மாணவர்களுக்குப் பரிசாக வழங்க ஆயிரம் பேனாக் களை அனுப்பினார். சுமார் 3,500 சர்பத்களை மாணவ மாணவியருக்கு வழங்கியிருப்போம்.
மாண்வர்கள் மத்தியில் திருக்குறளைப் பரப்ப தினமும் சர்பத் இலவசமாக வழங்க ஆசை தான். ஆனால் தொடர்ந்து வழங்க பொருளாதாரம் இடம் தராது. அதனால் அப்பா பிறந்த நாளை ஓட்டி இனி ஒவ்வொரு ஆண்டும் இதை விட சிறப்பாகக் கொண்டாடுவோம்.
பொதுவாக,எங்கள் கடையில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள், முதியவர்களுக்கு, இலவசமாகவே வழங்கி வருகிறோம்.
பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரியில் படித்தோம். ‘திருக்
குறளுக்கு சர்பத் அறிவிப்பைக் கேள்விப்பட்ட கல்லூரி நிர்வாகம் எங்களை அழைத்துப்பாராட்டியது என்கிறார்
6/10 /2024
நன்றி தினமணி கதிர்