Skip to content

எழுதி முடியாப் பெருவரலாறு!

இன்று குன்றக்குடி அடிகளார் பிறந்தநாள் 11-7-1925

நூற்றாண்டு விழா தொடங்குகிறது

திட்டமிட்டு செயலாற்றுவோம்

அடிகளார் குறள் மற்றும் சமுதாயம் சார்ந்த கருத்துகள் நாளும் பதிவிடுவோம்

நெஞ்சில்
பதிய விடுவோம்
பதியம் இடுவோம்

நன்றியுடன் நினைவு கூர்வோம்.

“உலகிலுள்ள மத பேதங்களையெல்லாம் வேருடன் களைந்து சர்வ சமரசக் கொள்கையை நிலைநாட்ட வேண்டுமானால், அதற்குத் தமிழ்நாடே சரியான களம். உலகம் முழுவதும் மத மாச்சரியங்கள் இல்லாமல் ஒரே தெய்வத்தைத் தொழுது உஜ்ஜீவிக்கும்படி செய்யவல்ல மகான்கள் இப்போது நம் நாட்டில் தோன்றியிருக்கிறார்கள். அது பற்றியே பூமண்டலத்தில் புதிய விழிப்பு, தமிழகத்திலே தொடங்குமென்கிறோம்’ என்ற மகாகவி பாரதியின் வாக்கு அப்படியே மெய்யாகும்படி, தம் வாழ்வைத் தவ வாழ்வாக்கித் தரணி உய்யப் பாடுபட்ட தமிழ்மாமுனிவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார்.

அற்புதத் தொண்டாற்றிய அப்பர் பெருமான், செங்காவிச் சிங்கம் சுவாமி விவேகானந்தர், புரட்சித் துறவி இராமாநுஜர், அருட்பிரகாச வள்ளலார் என்னும் அருளாளர்மரபில் தமிழகம் செய்த தவப்பயனாய் வந்து உதித்த சைவ சமயத்து ஆன்மிக ஞாயிறு அடிகள் பெருமான். 11.7.1925 அன்று மயிலாடுதுறையை அடுத்த நடுத்திட்டுக் கிராமத்தில், சீனிவாசம்பிள்ளை- சொர்ணத்தாச்சி தம்பதியருக்கு மகவாகப் பிறந்த இந்த ஞானமதலைக்குப் பெற்றோர் இட்ட பெயர், அரங்கநாதன். துறவேற்ற காலத்தில் தரப்பெற்ற திருநாமம், “கந்தசாமித் தம்பிரான். குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்தின் குருமகாசந்நிதானமாகப் பட்டம் ஏற்றபோது, “திருவருள்திரு தெய்வசிகாமணி அருணாசல தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்.” இன்றளவும் மக்கள் மனங்களில் நின்றுநிலைக்கும் திருப்பெயர், “தவத்திரு குன்றக்குடி அடிகளார்.’

ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு அடிமைப்பட்டு, அறியாமையும் வறுமையும் அரித்தெடுக்க, ஜாதி, சமயச் சழக்குகளால் தாய் நாட்டு மக்கள் தவிக்கின்ற காலத்தில்  Read More…..