அன்பே சிவம்
சங்கராஸ்ரமம் ஐந்தருவி குற்றாலம் தலைவர் பிரம்மஸ்ரீ ஆ சிவராமகிருஷ்ணன் .. அகவை 93 . அன்பு வடிவம் அருள் வடிவமாக மாறப் பெற்றவர்.இன்று அருட்பெருஞ்ஜோதியில் கலந்தார்.
தனது 13 வது வயதில் இருந்தே தென்காசி திருவள்ளுவர் கழகத்துடன் தன்னை ஐக்கிய படுத்திக் கொண்டவர்.. 80 ஆண்டுகள் குறள் பணியில், தொண்டில்…
கழகத்தின் தொண்டில் தன்னைக் கரைத்துக் கொண்டவர் என்றால் மிகையாகாது..
கடந்த 1953 ஆம் ஆண்டில் துணைச் செயலர் தென்காசி திருவள்ளுவர் கழகம் , பிறகு 1965 லிருந்துசெயலராக தொடர்ந்து பணியாற்றி வந்தார்
அகவை 93 இருந்தாலும் ஒரு இளைஞரை போல் ஓடியாடி சுறுசுறுப்புடன் செயல்படுவார்.. விருந்தோம்பலில் மிகச் சிறந்த ஓங்கிய பண்பாளர் குறள் சித்தர் என்று பெயர் பெற்றவர் . உரிய நேரத்தில் நிகழ்ச்சிகளை ஆரம்பிப்பார் .
சங்கராஸ்ரமம் ஐந்தருவி குற்றாலம் தலைவர் பிரம்மஸ்ரீ ஆ சிவராமகிருஷ்ணன் ஐயா இன்று 08/06/23 வியாழன் மாலை 0538 க்கு குருபிரான் திருவடிகளை அடைந்தார்.
நாளை நல்ல நேரத்தில் சங்கராஸ்ரமத்தில் குறள் சித்தர் பிரம்மஸ்ரீ ஆ சிவராமகிருஷ்ணன் ஐயாவின் தூல உடலுக்கு சித்த வித்யார்த்தி முறைப்படி நிகழ்வுகள் நடந்தேறும்..
நேற்று மதியம் 1 10 வாக்கில் அவரை சந்தித்தபோது அவர் கூறிய முதல் சொல் “எல்லாம் நன்றாக நடந்து கொண்டிருக்கிறது .நான் இங்கே இல்லை என்றாலும் எல்லாம் நன்றாக நடக்கும் என்ற நான் உணர்கிறேன் “என்றார்
YouTube Liveபார்த்துவிட்டு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது நன்றாக நடந்து கொண்டிருக்கிறது என்று கூறினார்
“எல்லாம் நீங்கள் திட்டமிட்டது ..அதன்படியே சிறப்பாக நடந்து வருகிறது என்று கூறினேன் …மேலும் நூற்றாண்டு விழா நாம் சிறப்பாக கொண்டாடுவோம் உங்கள் வழிகாட்டுதலில் “என்று கூறினேன்
ஐயா அருவமாக நின்று குருபிரானோடு கலந்து நமக்கு வழிகாட்டுவார்…
உங்கள் பணிகளை உங்கள் அடியொற்றி தொடர்வோம் ஐயா….
வள்ளுவர் குரல் குடும்பம்
08/06/2023