Skip to content

திரு. சுப்பராயன்,திருவள்ளூர்,சென்னை

திரு. சுப்பராயன், திருவள்ளூர்,சென்னை.

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்திலேயே திருக்குறள் சுப்பராயன் என்று அழைத்து வழிச் சொல்லும் அளவிற்கு புகழ் பெற்றவர். தற்போது அவர் ஓய்வுப் பெற்றாலும் தலைமைச் செயலகத்திலும் அனைத்து செயலாளர்களிடம் சென்று திருக்குறள் தொண்டு குறித்து பேசும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.

ஞான மன்றம் நடத்திய வடக்கு மண்டல மாநாடு, ஆற்காட்டிற்கு வந்திருந்த பேராளர்கள் அனைவரும் போற்றும்படி வள்ளுவர் வேடமணிந்து திருக்குறளைப் பாடி நடித்தது பாராட்டும்படி இருந்தது. காட்சி ஊடகங்களாலும் வள்ளுவம் பரப்பப்படவேண்டும். குறள் கருத்துக்கேற்ற அடையாளங்கள் உருவாக்கப்படவேண்டும். திருக்கோயில்கள் அமைத்து தேரோட்டங்கள் நடத்தப்படவேண்டும் என்ற என் செயல் திட்டங்களில் பலவற்றை நடைமுறைப்படுத்தி வருபவர் சுப்பராயன். அவரது திண்டிவனம் காட்டேரிப்பட்டில் ஆதிகுரு திருவள்ளுவர் திருக்கோயிலை உருவாக்கி ஆண்டுக்கொருமுறை திருவிழா நடத்துகின்றார்.

வள்ளுவர் கூறும் ஆதிபகவன் சூரியனே என்றும் அதைச் சுற்றிதான் உலகமே இயங்குகிறது என்றும் அதனால் சூரியனை வழிபடுவதே வள்ளுவர் வழி என்றும் தெளிவுபடக் கூறுகிறார். அவர் உருவாக்கிய கோயிலை மேலும் மேம்படுத்தி பெரிய அளவானதாகவும் போற்றக் கூடியதாகவும் மாற்ற வேண்டியது நம் கடமை. திருக்குறள் சுப்பராயன் தற்போது தங்கியுள்ள திருவள்ளூரைச் சுற்றி பள்ளிகளுக்குச் சென்று திருக்குறள் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தன்னுடைய ஓய்வூதியப் பணத்திலிருந்து எத்தனை பேர் திருக்குறள் பரப்புரைக்கு செலவு செய்வார்கள் என்று எண்ணிப்பாருங்கள். சுப்பராயனின் திருக்குறள் தொண்டு மேலும் மிளிர நாம் வாழ்த்து தெரிவிப்போம்!

 

நன்றி
தொகுப்பு
திருக்குறள் சி. பன்னீர்செல்வம்
மாவட்டக் கல்வி அலுவலர் ( பணி நிறைவு )
திருவள்ளுவர் ஞான மன்றம்
ஜெயங்கொண்டம்