Skip to content

“சொல்லுதல் யார்க்கும் எளிதாம் அரியனவாம் சொல்லிய வண்ணம் செயல்….“

நான் அடிக்கடி சொல்வதுண்டு…
நம் பிள்ளைகளுக்கு நாம் வைத்து விட்டுப் போகவேண்டிய செல்வம் – சொத்து சுகம் வீடு வாசல் வங்கி இருப்பு ஆகியவை அல்ல…

இவைகளைவிட மேலான – எந்தப் பள்ளி கல்லுரிகளிலும் – புத்தகங்களிலும் கற்றுத் தராத -அவர்கள் வாழ்க்கைக்கு உதவும் நல்லொழுக்கம் – பழக்க வழக்கங்கள் – தன்னம்பிக்கை – துணிவு விடாமுயற்சி – நேர்மை – நாணயம் – மனிதர்களை மதிப்பது – நேரம் தவறாமை — இவைகள்தான் மிகப் பெரிய செல்வமாகும்,,,,

கடனை அடைக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தால்தான் கடன் வாங்க வேண்டும்,,, சொன்னபடி சொன்ன நேரத்தில் திருப்பித்தர வேண்டும்,,,

ஒரு வீட்டிற்குப் போகும் முன் அனுமதி பெற்று போக வேண்டும்,,, நினைத்த நேரத்தில் போகக் கூ டாது..
வறுமை வளமை இன்பம் துன்பம் சோதனை வேதனை எல்லாம் மாறி மாறித்தான் வரும்,,, எதற்கும் தயாராக இருக்க வேண்டும்,,, சோர்வடையக் கூடாது…. தன்னம்பிக்கை நூல்களை அதிகம் படிக்க வேண்டும்,,,,
எதையும் தள்ளிப் போடக் கூடாது… உடனுக்குடன் செய்து முடித்தல் வேண்டும்…
இந்த இடத்தில்தான் வள்ளுவர் என் தலையில் கொட்டுகிறார்,,,, எனக்காகவே இந்தக் குறளை எழுதியிருப்பார் போலிருக்கிறது—
“சொல்லுதல் யார்க்கும் எளிதாம் அரியனவாம்
சொல்லிய வண்ணம் செயல்….“
ஒரு சம்பவம் என் மனதை உறுத்துகிறது…

Read More…