Skip to content

திரு. தா. சம்பத்,திருக்கோவலூர்.

திரு. தா. சம்பத், திருக்கோவலூர்.

தா. சம்பத் என்பது இவரது பெயர் மட்டுமல்ல. தா. சம்பத் என்றால் எல்லோருக்கும் எல்லா நேரமும் ஏதாவது தந்துவிட வேண்டும் என்று எண்ணமுடையவர். அதனால், ஏற்படும் பெரும் இழப்பைக் கூட ஏற்றுக் கொள்பவர். இப்படிப்பட்ட பண்பாளர்களைப் பார்த்துத்தான் வள்ளுவர் “என்பும் உரியர் பிறர்க்கு” என கூறியிருப்பார் என்று நினைக்கிறேன்.

மணலூர்ப் பேட்டை அரசு மேனிலைப் பள்ளி அறிவியல் முதுகலை ஆசிரியர். தான் பணியாற்றும் பள்ளி வளாகத்திலேயே திருகோவிலூர் சிலையை விட பெரிய சிலையை நிறுவ வேண்டும் என்று உறுதிபூண்டு நிறுவியுள்ளார் என்றால், மனமிருந்தால், அதற்கேற்ற உழைப்பு இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு இவர் ஒரு சான்று.

தமிழ்நாட்டிலுள்ள தமிழ் இயக்கங்களை இணைத்து பெருமளவில் தமிழ் அறிஞர்களுக்கு பெருமை சேர்க்க வேண்டுமென்றே ஒரு கூட்டமைப்பை உருவாக்கி வட தமிழ்நாட்டில் பல விழாக்களை நடத்தி வருபவர். நாட்டுப்புறக் கலைஞர்களில் வறுமையில் வாடுபவர்களை அடையாளம் கண்டு உதவுபவர். ஒரு பள்ளி ஆசிரியராகத் திறமையாகப் பணியாற்றிக் கொண்டே இத்தகைய சமூகப் பணிகளைச் செய்ய வேண்டுமென யார் இவருக்கு ஆணையிட்டார்கள். எல்லாம் திருக்குறளால் பெற்ற திருவினை தான்.

“நிலாமுற்றம்” என்ற இலக்கிய இதழை நடத்தி பல புதிய கவிஞர்களை அடையாளப்படுத்தி பெருமை அளிப்பவர். இவரை திருக்குறள் திருத்தொண்டர் என வரிசைப்படுத்துவது நான் செய்யும் திருக்குறள் பணியை முழுமைப்படுத்துவதாக அமையும்.

நன்றி
தொகுப்பு
திருக்குறள் சி. பன்னீர்செல்வம்
மாவட்டக் கல்வி அலுவலர் ( பணி நிறைவு )
திருவள்ளுவர் ஞான மன்றம்
ஜெயங்கொண்டம்