பேசுபவர்: திரு சி.இராஜேந்திரன்
புத்தகம்:
“வள்ளுவர் வழியில் காந்தியம்”
ஆசிரியர்: புலவர் மு.சண்முகசுந்தரம்
பேச்சாளர் பற்றி:
இந்த வார பேச்சாளர் திரு சி. இராஜேந்திரன் I.R.S., அவர்களின் தந்தைவழிப் பாட்டனார் அமரர் மு. வையாபுரி, சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டு சிறை சென்றவர். இந்திய வருவாய்ப் பணியில் (IRS- சுங்கம், மத்திய கலால் மற்றும் சேவை வரி) 1985-ஆம் ஆண்டு சேர்ந்தார். இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும், சிங்கப்பூரில் இந்திய தூதரகத்திலும் பணியாற்றிய அனுபவம் உடையவர். மத்திய அரசுப் பணியில் சிறப்பாக பணிபுரிந்ததை பாராட்டும் வகையில், இவருக்கு 2003-ஆம் ஆண்டு குடியரசு தின விழாவின்போது விருது வழங்கப்பட்டது. “திருக்குறள் உவமை நயம்” என்ற 238 திருக்குறள் உவமைகளுக்கு விளக்கம் அடங்கிய நூலை 2007-இல் எழுதி வெளியிட்டார். அதுமுதல், பல்வேறு இடங்களுக்கும் சென்று திருக்குறள் சார்ந்த பயிற்சி பட்டறைகளை பல்வேறு தளங்களில் நடத்தியிருக்கிறார். “பாமரருக்கும் பரிமேலழகர்” என்ற 1890 பக்கங்கள் கொண்ட இவரதுநூல் பத்தாண்டு கால உழைப்பில் விளைந்தது. இவரது திருக்குறள் பணியைப் பாராட்டி பல்வேறு அமைப்புகள் விருதுகள் வழங்கிப் பாராட்டியுள்ளன. இதற்கு முன்னர், புதன் வாசகர் வட்டத்தில் “எல்லாம் செயல் கூடும்: காந்திய ஆளுமைகளின் கதைகள்” மற்றும் “மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்” போன்ற நூல்களை அறிமுகம் செய்து பேசியிருக்கிறார்.
நூல் பற்றி:
காந்தியத்தின் கொள்கைகள் வள்ளுவர் காட்டும் குறளோடு எவ்வாறு பொருந்துகின்றன என்று காந்தியடிகளின் வாழ்வில் நடந்த சம்பவங்கள் வழியே இந்நூல் விளக்குகிறது. இந்நூல் 1960-ஆம் ஆண்டு ஈரோட்டைச் சேர்ந்த சிவலிங்க நூற்பதிப்புக் கழகத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
ஆசிரியர் பற்றி:
நூலாசிரியர் புலவர் மு.சண்முகசுந்தரம் அவர்கள் சேலத்தில் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றிவர்.