Dr ப. இரமேஷ் MS DO DNB
ஆர்த்தி கண் மருத்துவமனை
கரூர்
குறள் வாசிக்க மட்டுமல்ல…
வாழ்ந்து காட்டவும்தான்.
புறக்கண்ணை சரிசெய்ய மருத்துவர் பணி;
அக இருள் நீக்கி, அகக் கண் பார்வையை சரி செய்ய திருக்குறள்
ஆன்மாவின் வாயில் கண்
தேர்ந்தெடுத்த நூறு குறள்கள்… அதன் உரை அதற்கேற்ற படம் போட்ட பதாகைகள்.. கரூர் நகர் முழுவதும் காட்சிப் படுத்தப்பட்டது முற்றிலும் சிறப்பான வரவேற்பு
பிறகு அதுவே நூலாக ஆக்கம் பெற்றது
.திருக்குறள் அறிஞர்களிடமிருந்து பலத்த வரவேற்பு பெற்றது
தேர்ந்தெடுத்த 100 திருக்குறள்களில் வினாடி வினாப் போட்டி பள்ளி மாணவர்களுக்கு நடத்தி ரூபாய் 3 இலட்சம் பரிசு கொடுத்தார்.
கரூரில் பள்ளிகளில் குறள் கண்காட்சி அமைத்தார்கள்
திருவள்ளுவர் ஒரு உளவியல் அறிஞர்.
திருக்குறளில் நகைச்சுவைக்குப் பஞ்சமே இல்லை என்கிறார்
நமக்கு ஒரு மோசமான பகை நாம் கொண்ட சினமே
அவரது மருத்துவமனையில் ஒரு தளத்தில் குறள் பதாகைகள், குறள் – பொருள் -ஆங்கிலம், தமிழ்- உரிய படங்கள் கொண்ட பதாகைகளை நிரந்தரமாக காட்சிப் படுத்தி வைத்துள்ளார்கள்
மகிழ்வுந்துகளில் முச்சீர், நாற்சீர் குறள் மணிகளைத் தெரிவு செய்து பொருத்தினார்கள்
திருக்குறளின் அச்சாணி “மனத்துக்கண் மாசிலன் ஆதலே”
மதங்களின் நேர்கொண்ட பார்வையின் சாரமே திருக்குறள்.
மனித இனம் “மனிதம்” என்ற சாரத்தை, விடுத்து சக்கையைக் கொண்டாடுகிறது என்பது இவரது ஆதங்கம்.
நம் உயர்வும் தாழ்வும் நாம் செய்யும் வேலையின் நேர்த்தியில்தான் உள்ளது பிறப்பில் அனைவரும் சமமே.. இதுவே வள்ளுவர் உள்ளம் என உறுதியாகக் கூறுகிறார்
தென்காசி திருவள்ளுவர் கழகம் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டது மனதுக்கு இதமானது. வெளியே பொதிகை மலைச் சாரல், நல்ல விருந்தோம்பல், உள்ளே “தண்” என்ற திருக்குறள் தென்றல். உடலுக்குக்கும் மனத்திற்கும் இதமான சூழல்
மக்களிடம் குறள் சென்றுள்ளதா? , தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதா? இல்லை என்பது வருத்தம் தரும் உண்மை
திருக்குறள் ஒரு பொதுமக்கள் இயக்கமாக (வெகுஜன இயக்கமாக) வேண்டும்
திருக்குறளை முன்னிலைப்படுத்துவோம். திருக்குறள் பரவலாக்கம் விரைந்து நடைபெற வேண்டும்.. என்கிறார்
நிஜ வாழ்க்கை அனுபவம்
ஒரு எளிய மனிதனின் மண வாழ்க்கையில் வசந்தம் வீச வைத்த குறள்
திருக்குறள்… இருளை விரட்டும் பொய்யா விளக்கு… நல்வாழ்க்கைக்கு வழியும் காட்டும் கலங்கரை விளக்கம்
எந்தத் துறையிலும் வல்லுநராக வேண்டுமா? அதன் அடித்தளம் திருக்குறளில் உள்ளது என உறுதிபடச் சொல்கிறார்
குறள் வாசிக்க மட்டுமல்ல… வாழ்ந்து காட்டவும்தான்.
எனைத்தானும் நல்லவை கேட்க – 23, பகுதி – 2 | Dr. ப. இரமேஷ் | Thirukkural | Thiruvalluvar