அரசியலைப் பிழைப்பாக்கி, தொழிலாக்கி, வணிகமாக்கி அதை நியாயப்படுத்தும் அரசியல் செயல்பாடுகள்,
அதிகாரத்தைப் பயன்படுத்தி அடுத்தவா் சொத்தை அபகரித்தல்,
அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்தி பொதுச் சொத்தை தனதாக்கிக் கொள்ளுதல்,
சுயநலச் சிந்தனையுடன் பொதுவாழ்வில் செயல்படல்,
உழைக்காமல் உயர வேண்டும் என்று எண்ணுதல்,
மக்கள் வரிப்பணத்திலிருந்து வரும் சம்பளத்தைப் பெற்றுக் கொண்டு, மக்களுக்குச் சட்டப்படி ஆற்ற வேண்டிய பணிகளைச் செய்யாமல் மக்களை அவமதிப்பது,
சட்டத்திற்குப் புறம்பான செயல்பாடுகளைச் செய்து அரசுத்துறைகளில் அதிகாரிகளும் அலுவலா்களும் பணம் சம்பாதிப்பது,
சமூகத்தில் நடக்கும் தீய செயல்களுக்குத் துணைபோவது,
தான் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்வதற்கு கூச்சமின்றி மக்களிடம் கையூட்டுப் பெறுவது,
தீய வழியில் பணம் ஈட்டி பகட்டு வாழ்க்கையில் ஈடுபட்டு ஏழை எளிய மக்களை ஏங்கச் செய்வது,
தவறு செய்து தன் தந்தை தாய் ஈட்டிய பணத்தில் இளைஞா்கள் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து இளைஞா்கள் என்ற அடையாளத்திற்கே மாசு கற்பிப்பது,
பணம் தந்து அரசுப் பணிகளையும் அரசியல் கட்சிகளில் பதவிகளையும் பிடித்து பிழைப்பு நடத்துவது,
பணத்திற்காக உயிருக்கும் மேலான உரிமைகளை – வாக்குரிமை வரை – வணிகம் செய்வது,
ஏழ்மையின் போா்வையில் சுயமரியாதையை இழப்பது,
தவறு செய்து ஈட்டிய பணத்தில் பகட்டு வாழ்க்கையை கூச்சமில்லாமல் மற்றவா்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவது,
அறமற்று மருத்துவம் என்ற பெயரில் நோயாளிகளிடம் பணம் பறிப்பது,
கல்வி என்ற பெயரில் மாணவா்களைத் தகுதிப்படுத்தாமல் பணம் பெற்றுச் சான்றிதழ் தருவது,
கண்முன்னே நடக்கும் தவறுகளைத் தட்டிக் கேட்காமல் பாா்த்துக்கொண்டு வாளா இருப்பது,
மற்றவரை சுரண்டியே வாழ்க்கை நடத்துவது,
அனைத்தும்தான் சிறுமைச் செயல்பாடுகள்’
என்னுடைய தாத்தா மு.வையாபுரி 1930 களில் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டு சிறை சென்றவர்
கடலூரில் கைது செய்யப்பட்டு திருச்சியில் கடுங்காவல் தண்டனை ஓராண்டு அனுபவித்தவர்.. என்ற முறையில் இவரது உணர்வை நான் முற்றிலும் பகிர்ந்து கொள்கிறேன்
சிந்தனையைத் தூண்டும் கட்டுரை
சி இராஜேந்திரன்
வள்ளுவர் குரல் குடும்பம்