பாமரருக்கும் பரிமேலழகர் கருத்தரங்கம்
நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் (2019 ) பாமரருக்கும் பரிமேலழகர் ஒரு நாள் கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது
நீதியரசர் ஆர் மகாதேவன் சிவாலயம் ஜெ மோகன்
பேராசிரியர் இ சுந்தரமூர்த்தி
பேராசிரியர் தெ ஞானசுந்தரம்
பேராசிரியர் சாமி தியாகராசன் பேராசிரியர் ம வெ பசுபதி பேராசிரியர் மருதூர் அரங்கராசன்
(இவர்கள் அனைவருமே இன்று நம்மோடு வாழும் மாபெரும் அறிஞர்கள் .ம வெ பசுபதி ஐயா அண்மையில் மறைந்து விட்டார்)
நண்பர் சங்கர சரவணன்
நண்பர் சந்தியா நடராஜன்
எனது ஏற்புரை
என நாள் முழுக்க 200 பேர் கலந்து கொண்ட நிகழ்வு நடைபெற்றது
தினமும் ஒவ்வொன்றாக நான் அந்த உரைகளைப் பதிவிடுகின்றேன்
வாய்ப்பும் நேரமும் ஆர்வமும் உள்ளவர்கள் கேட்கலாம்
கழிபேர் ஆர்வம் உள்ளவர்கள் இணையத்தில் சென்று youtube வழியாக கேட்கலாம்
பரிமேலழகர்உரை
பற்றி, சில சொற்கள்.
கிட்டத்தட்ட 800 ஆண்டுகளாக தமிழ் உலகத்தில் வலம் வருகிறது. இதைக் காலங் காலமாக நெஞ்சில் தூக்கிச் சுமந்தவர்கள் எல்லோரும் பார்ப்பனர் அல்லாதவர்கள்…
குறைகளே இல்லாதவர்கள் கிடையாது
பரிமேலழகர் சில இடங்களில் சறுக்கி விழுந்துள்ளார் .. அவர் காலநிலையை மனத்தில் கொண்டு முழுக்க முழுக்க அரசரை மையமாக வைத்து அவர் திருக்குறளை பார்த்ததால் அவருக்கு இவ்வாறு தோன்றியது.. புரிதல் ஏற்பட்டது.
ஆனால் ஒரு நிர்வாகத்தில் உள்ள தலைவனையோ அல்லது இல்லறத்தானையோ “எல்லோரும் இந்நாட்டு மன்னர்” என்ற கருத்தியல் நோக்குடன் மையமாகக் கொண்டு பார்த்தால் வெவ்வேறு புரிதல் ஏற்படும்.
ஏன் …..இல்லறத்தில் வாழும் நம் ஒவ்வொருவருக்கும் கூட ஒரு பார்வை கிடைக்கும்.
யார் வேண்டுமானாலும், எவரை வேண்டுமானாலும் மையமாக வைத்து பார்த்தாலும் , அவரவர்களுக்கு வெவ்வேறாகத் தோன்றும் …
ஆனால் மீண்டும் கூறுகிறேன் திருக்குறள் பதவுரை 100க்கு 90 இடங்களில் ஒன்றாகத்தான் எல்லோருக்கும் இருக்கும்..
விளக்கம் மட்டுமே மாறுபடும் .இல்லறத்தார்களுக்கே அவரவர் அனுபவத்திற்கு ஏற்ப ,வெவ்வேறு விளக்கங்கள் தோன்றும்
அதுதான் திருக்குறளின் சிறப்பு காலங் கடந்தும் பேசப்படும் நூலாக , வாழ்வியல் விளக்கமாக இருப்பதற்கு காரணம்.
நிறைவாக குணம் நாடி…. குற்றமும் நாடி … வள்ளுவரின் நிறை மொழி…
இதை மனத்தில் கொண்டு வாழ வேண்டும்…
இதையே சற்று மாற்றினால் “குற்றம் நாடி குணமும் நாடி” என்றால், பார்க்கும் உரையின் குணம் ஒன்றுமே நம் கண்ணுக்குத் தெரியாது….
மனித உறவுகளுக்கும் இது பொருந்தும்
இல்லையெனில் இழப்பு நமக்குத்தான்…
800 ஆண்டுகள் கழித்தும் பேசப்படும் உரைகள், நூல்கள் எத்தனை….
எனவே பரிமேலழகர் உரை சிறந்த உரைகளில் தலையாயது
சிற்பி பாலசுப்ரமணியன் , “பாமரருக்கும் பரிமேலழகர்” என்ற நூலுக்கு அளித்த தனது அணிந்துரையில் கூறுவார்
“வடநூல் சார்பானதும், வர்ண முறையிலானதும், தன்கால வழக்குகளுக்கு இடம் தந்தமையால் ஒரு பக்கம் சாய்ந்த இடங்கள் பரிமேலழகர் உரையில் உண்டென்றாலும், நுட்பம், ஒட்பம் பன்னூல் புலமை, தர்க்க நெறி, துல்லிய தெளிவு, ஆற்றொழுக்கான தமிழ்நடை என மாண்புகளால் ஓங்கி ஒரு கொடிமரம் போல் உயர்ந்து நிற்பது பரிமேலழகருரை”.
விருப்பறா அன்புடன்
சி இராஜேந்திரன்
www.voiceofvalluvar.org
04/08/2023
சென்னை