‘முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்’
இக்குறளுக்கு எடுத்துக்காட்டாக தனது திறமையாலும் விடாமுயற்சியாலும் தினமும் ஒரு குறள் என ஓவியத்தின் மூலம் அதன் பொருளை உணர்த்தி இன்ஸ்டாகிராமில் பதிவிடுகிறார் விழுப்புரத்தைச் சேர்ந்த சவுமியா. தற்போது சென்னை வி.பி. வைஷ்ணவ் கல்லுாரியில், விஷூவல் கம்யூனிகேஷன் துறை உதவி பேராசிரியராக பணிபுரிகிறார்.
அவரிடம் பேசுகையில்…
வேலுாரில் பள்ளி படிப்பை முடித்தேன். கல்லுாரியில் யூ.ஜி., ஆங்கில இலக்கியம் படித்தேன். படித்துக்கொண்டிருக்கும்போதே அனிமேஷனில் ஆர்வம் வந்ததால் அதில் டிப்ளமோ முடித்தேன்.
கவிதைகள், கதைகளை ஓவியங்களாக பிறர் வரைந்ததை பார்க்கும் போது ஆச்சரியமாக இருந்தது. நாமும் இப்படி செய்ய வேண்டும் என்ற உந்துதல் வந்தது. கல்லுாரி படிப்பு முடித்த பின் விளக்கப்படம், வரைபடங்கள், அனிமேஷன் படங்கள் உருவாக்குவதில் ஆர்வம் மேலிட்டது. ஓவியங்கள் வரைந்து வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இப்படித்தான் உருவானது.
தமிழில் எத்தனையோ பாடல்கள், செய்யுள்கள் இருந்தாலும் இரண்டே வரிகளில் நம் வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் திருவள்ளுவர் தந்துள்ளார். ஆயிரம் வருடங்களுக்கு Read More….