இரா கதிரவன் அவர்கள், பல்வேறு நிறுவனங்களில் பொறியாளராகவும் மேலாண்மை பொறுப்புகளிலும் சுமார் 35 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
தமிழ் ஆர்வலர். வாசிப்பு மற்றும் எழுத்து ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறவர். தினமணி நாளிதழ் மற்றும் சில சிற்றிதழ்களில் அவ்வப்போது தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருபவர்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் இணைந்து நடத்தி வரும் ‘முதல் மொழி’ என்ற அமைப்பின் நிறுவன உறுப்பினர்களுள் ஒருவர். அவ்வமைப்பு நடத்திவரும் மாதாந்திர மின்னிதழ் ஆசிரியர் குழுவின் உறுப்பினர்.
வள்ளுவர் குரல் குடும்ப உறுப்பினர்; ‘நவில்தொறும் நூல் நயம்’ நிகழ்ச்சிக் குழு உறுப்பினர். சமீபத்தில் இவர் எழுதிய ‘யாம் துஞ்சலமே’ என்ற கட்டுரை தொகுப்பு நூல் வெளியிடப்பட்டது .