குன்றக்குடி அடிகளார் பெரியவரின் நூற்றாண்டு விழா!
தவத்திரு குன்றக்குடி அடிகளார் பெரியவரின் நூறாவது பிறந்தநாள் நடப்பாண்டு! ஜுலை 11 ஆம் நாள் தொடங்குகிறது.
உலகத் திருக்குறள் பேரவை செங்கல்பட்டு மாவட்டம் சார்பாக அடிகளாரின் நூற்றாண்டுத் தொடக்க விழா 20-7-2024 சனிக்கிழமை மாலை 5- மணிக்கு தாம்பரம் வள்ளுவர் குருகுலம் மேல்நிலைப்பள்ளியில் ( தாம்பரம் பேருந்து நிலையம் அருகில்) நடைபெற்றது.
தஞ்சை தமிழ் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் இ. சுந்தரமூர்த்தி அவர்கள் நூற்றாண்டு விழாவைத் தொடக்கி வைத்துப் பேருரை ஆற்றினார்.
சென்னை பச்சையப்பன் கல்லூரி மேனாள் தமிழ் பேராசிரியர் முனைவர் தெ. ஞானசுந்தரம் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்.
சுங்கம் நடுவண் கலால் சேவை வரித் துறை மேனாள் தலைமை ஆணையர் சி. இராசேந்திரன் IRS அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
உலகப்புகழ் ஆன்மீகப் புரட்சியாளர் சமுதாயப் சிற்பி காவி போர்த்திய பகுத்தறிவாளர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் பெரியவரின் சாதனைகளை புரட்சிகளை விளக்கி அந்த முப்பெரும் அறிஞர்கள் உரை அமைந்தது.
ஆன்மீக ஞானி தமிழ்மாமுனி உலகத் திருக்குறள் பேரவை நிறுவனத் தலைவர் திருவண்ணாமலை குன்றக்குடி 45 வது சந்நிதானம் தவத்திரு குன்றக்குடி அடிகளார் பெரியவரின் நூற்றாண்டு விழாவிற்கு திரளாக அறிஞர்கள் ஆர்வலர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
திருவள்ளிநாயகம் , செயலர் உலகத் திருக்குறள் பேரவை , செங்கற்பட்டு வரவேற்புரை
0:13:00 புதுகை வெற்றி வேலன், தலைவர் உலகத் திருக்குறள் பேரவை , செங்கற்பட்டு வரவேற்புரை
0:45:00 பேராசிரியர் சுந்தரமூர்த்தி உரை
1:17:00 சி இராஜேந்திரன், வள்ளுவர் குரல் குடும்பம் உரை 1:19:16
01:40:00 பேராசிரியர் தெ ஞானசுந்தரம் உரை