Skip to content

“கவிஞர் செவ்வியன் என்கிற குப்புசாமி மறைந்தார்”

திருக்குறள்: 981

கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.
It is said that those who are conscious of their duty and behave with a perfect goodness will regard as natural all that is good.

மிகச் சிறந்த சமூக சிந்தனையாளர்

உலக திருக்குறள் கூட்டமைப்பு உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல முறை அவரது இல்லத்தில் சென்று நான் சந்தித்து உரையாடி இருக்கிறேன்

சென்னையில் கிழக்கு கடற்கரை சாலையில் நீலாங்கரை பகுதியில் தனது இல்லத்தின் மேல் மாடியில் ஒரு வகுப்பறை கட்டி திருக்குறள் வாழ்வியலாக்க மன்றம்
வழியாக குறள் நெறி பரப்பி வந்தார்.

மிகுந்த சமூக அக்கறை கொண்டவர் தான் பிறந்த கிராமமான ஆம்பலாப் பட்டு கிராமத்தில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கிட்டத்தட்ட ஊர் சார்பாக 30 லட்சத்துக்கு அதிகமாக நிதியை திரட்டி ஒரு வைப்பு நிதியாக வைத்து மாணவர்களுக்கு பல்வேறு பரிசுகளை அளித்து வந்தார்

அந்த அறக்கட்டளையிலிருந்து ஒரு ரூபாய் கூட சொந்த செலவுக்காக எடுக்க மாட்டார்கள் . போக்குவரத்து செலவுக்கு கூட பயன்படுத்த மாட்டார்கள்.

முழுக்க முழுக்க பரிசு தொகைக்காக மாணவர்கள் மேம்பாட்டுக்காக மட்டுமே பயன்படுத்தி வந்தார்

தனது வாழ்க்கை வரலாற்றை தோற்றுப் போனவனின் கதை என்று எழுதியிருந்தார்

கார்ல் மார்க்ஸ் ,சுவாமி விவேகானந்தர் ,காந்தியடிகள் திருவள்ளுவர் பெரியார் என்று ஐவரையுமே குறிப்பிட்டு அழைப்பிதழ் அச்சிடுவார்

உலகத் திருக்குறள் பேரவை செங்கற்பட்டு மாவட்டம் தலைவர் புதுகை வெற்றி வேலன் இரங்கல் செய்தியில் கூறுகிறார்….

“பொதுவுடைமைக் கொள்கை உடையவர்.
கடும் உழைப்பாளி. போராளி. எழுத்தாளர் கவிஞர். பிறர்க்கு உதவும் தயாளர். ஏழைக்கு இரங்கும் கருணையாளர். இப்படி பன்முகத் தன்மை கொண்டவர்.

உறவுக்குக் கை கொடுப்பார். நட்புக்குத் தோள் கொடுப்பார். எளியவர் இனியவர். என் நெஞ்சுக்கு நெருக்கமானவர். நேற்று இருந்தார். இன்றில்லை என்ற இலக்கணத்திற்கு இலக்கியமாகி விட்டார்.

“வள்ளுவர் குரல் குடும்பம் தன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றது

Read More….