Skip to content

சில சிந்தனைகளை மனத்தில் தோற்றுவித்தது.

அறம் = ஒழுக்கம், வழக்கு, தண்டம் என மூன்று கூறுகளாகப் பிரிக்கலாம்..( பரிமேலழகர் திருக்குறள் உரைப்பாயிரம்)

ஒழுக்கம் வளர வளர, வீண் சண்டை சச்சரவு வழக்குகள் குறைந்து போகும் , அதன் விளைவாக தண்டனை (தண்டம்) தரும் வேலையும் மறைந்து போகும்

காவல் துறைக்கும், நீதி மன்றத்திற்கும் வேலை குறைந்து போகும்.எனவே, வள்ளுவரின் பாடுபொருள் அறத்தின் ஒற்றைக் கூறு “ஒழுக்கம்” மட்டுமே.

முப்பாலிலும் வள்ளுவர் வலியுறுத்திச் சொல்வது அறம்.. அறம்.. அறம்.கொல்லி மலை அருள்மிகு அம்மனின் பெயர் “அறம் வளர்த்த நாயகி ” என்பது கூடுதல் தகவல்.

இறைவன் பெயர்
அறப்பாலீஸ்வரர்.
அறப் +பால் +ஈஸ்வரர்.
அறம் +பால் +ஈஸ்வரர்.
அறம் + நிர்வகிக்கும் +ஈஸ்வரர்.

(அறம் வளர்த்த நாயகர் என்ற தமிழ்ப் பெயர், காலப் போக்கில் ஏன், எப்போது மாறியது/ மாற்றப்பட்டது என்பது தனி ஆய்வுக்கு உட்பட்டது)

Meaning of pAlnA Posna. (பால்னா போஸ்னா) to nurture, to train and care, Metaphorically: take care of, to supervise.

அறத்தை நிர்வகிக்கும் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தலைவன் என்பது இதன் பொருள்.இந்த நேரத்தில், இத்தகைய பெயர்வைத்த நம் பெருமை மிகு முன்னோர்களைப் போற்றிப் பணிந்து வணங்குகிறேன்.திருக்குறளின் மூன்று பாலிலும் விரவி நிற்பது அறம் மட்டுமே.. அறத்துப்பால்.. தனி மனித ஒழுக்கம் தலைநிமிர வைக்கும்..

பொருட்பால்…
சமுதாய அறம் நாட்டையும், வீட்டையும் காக்கும்..

இன்பத்துப்பால்
கணவன் மனைவி அறம், வலுவான குடும்பத்தை உருவாக்கிக் கட்டிக் காக்கும். தந்நலமற்ற பரஸ்பர அன்பே இனிய குடும்ப வாழ்க்கையின் அடிநாதம்.வள்ளுவர் கூறுகிறார் என் அன்புக் குழந்தைகளே …

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்

(இனியவைகூறல் குறள் எண்:96)

திருமூலர் உரைக்கிறார் …
யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே.

எப்போதும் அறத்தை, ஒழுக்கத்தை நல்லனவற்றை மனத்தால் நாடி… “இனியவற்றை சொல்”.
அறம் பெருக ஆரம்பிக்கும் … அல்லவை தானாகவே தேயும்

அறம் வளர… பாவம் தேயும்.
💐 💐 💐 💐 💐 💐 💐 💐 💐 💐 💐 💐 💐

வள்ளுவம்
விதித்தன செய்தலும்
விலக்கியன ஒழிதலும், வாழ்வை செம்மையாக நடத்தப் போதும்..

இது ஒன்று மட்டுமே போதும்..

அன்புடன்
சி.இராஜேந்திரன்
வள்ளுவர் குரல் குடும்பம்
11/06/2022