வணக்கம்,
காந்தி கல்வி நிலையத்தின் புதன் வாசகர் வட்டத்தில் 04.10.2023 அன்று (மாலை 6.45-7.45)
பேசுபவர்:
திரு சி.இராஜேந்திரன்
புத்தகம்:
ஆசிரம வாழ்க்கை
ஆசிரியர்:
மஹாத்மா காந்தி
(தமிழில்:கோ.கிருஷ்ணமூர்த்தி)
இந்நிகழ்வு காந்தி கல்வி நிலையத்தில் நிகழும்.
GoogleMeet வழியே பங்கேற்க லிங்க்: https://meet.google.com/qwy-pozz-oei
பேச்சாளர் பற்றி:
இந்த வார பேச்சாளர் திரு சி.இராஜேந்திரன் IRS., அவர்களின் தந்தைவழிப் பாட்டனார் அமரர் மு.வையாபுரி, சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டு சிறை சென்றவர். இந்திய வருவாய்ப் பணியில் (IRS-சுங்கம், மத்திய கலால் மற்றும் சேவை வரி) 1985-ஆம் ஆண்டு சேர்ந்து, இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும், சிங்கப்பூரில் இந்திய தூதரகத்திலும் பணியாற்றிய அனுபவம் உடையவர். மத்திய அரசுப் பணியில் சிறப்பாக பணிபுரிந்ததை பாராட்டும் வகையில், இவருக்கு 2003-ஆம் ஆண்டு குடியரசு தின விழாவின்போது விருது வழங்கப்பட்டது.
“திருக்குறள் உவமை நயம்” என்ற 238 திருக்குறள் உவமைகளுக்கு விளக்கம் அடங்கிய நூலை 2007-இல் எழுதி வெளியிட்டார். அதுமுதல், பல்வேறு இடங்களுக்கும் சென்று திருக்குறள் சார்ந்த பயிற்சி பட்டறைகளை பல்வேறு தளங்களில் நடத்தி வருகிறார். “பாமரருக்கும் பரிமேலழகர்” என்ற மூன்று தொகுதிகள் (1890 பக்கங்கள்) கொண்ட இவரது நூல் பத்தாண்டு கால உழைப்பில் விளைந்தது. வள்ளுவத்தின் பால் ஈர்ப்பும் ஆர்வமும் கொண்டவர்களுக்காக 300 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கொண்ட VOICE OF VALLUVAR FAMILY-யை டெலிகிராம் தளத்திலும் WWW.VOICEOFVALLUVAR.ORG என்ற இணைய தளத்தையும் நண்பர்களோடு சேர்ந்து நடத்தி வருகிறார். இவரது திருக்குறள் பணியைப் பாராட்டி பல்வேறு அமைப்புகள் விருதுகள் வழங்கிப் பாராட்டியுள்ளன.
இதற்கு முன்னர், புதன் வாசகர் வட்டத்தில் “எல்லாம் செயல் கூடும்: காந்திய ஆளுமைகளின் கதைகள்” “மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்”, “வள்ளுவர் வழியில் காந்தியம்”, “எப்பிறப்பில் காண்போம் இனி” மற்றும் “காந்தி வழிக் கதைகள்” ஆகிய நூல்களை அறிமுகம் செய்து பேசியிருக்கிறார்.
நூல் பற்றி:
தென்னாப்பிரிக்காவில் பீனிக்ஸ், டால்ஸ்டாய் ஆகிய இரு ஆசிரம வாழ்க்கை முதல் இந்தியாவில் சபர்மதி, சேவாக்கிரம் ஆசிரமங்கள் என காந்தியடிகள் உருவாக்கிய ஆசிரமங்கள் அவர் வாழ்ந்த சத்திய வாழ்வின் சோதனைச் சாலைகளாகவும், தேசத்தின் எதிர்காலத்தை திட்டமிட்ட ஒரு சிந்தனைப் பள்ளிகளாகவும் இருந்தன. காந்தியடிகளைப் போலவே தோற்றத்தில் எளிமையாக இருந்தாலும், அவரது ஆசிரமங்களும் அவரைப் போலவே சாதித்தவை மலை அளவு பெரிது. அத்தகைய, ஆசிரம வாழ்க்கைப் பற்றி காந்தியடிகள் எழுதிய இந்நூலை முதன் முதலாக திருப்பூர் சர்வோதயப் பிரசுராலயம்
1950-இல் வெளியிட்டது. தற்போது இவ்வரிய நூலை அழிசி பதிப்பகம் மீண்டும் பதிப்பித்துள்ளது. காகா காலேல்கர் எழுதிய காந்தி காட்சிகள் என்ற நூலை மொழிபெயர்த்த கோ.கிருஷ்ணமூர்த்தி அவர்களே இந்நூலையும் மொழிபெயர்த்திருக்கிறார்.
இடம்:
காந்தி கல்வி நிலையம்,
தக்கர் பாபா வித்யாலயா வளாகம்,
58 வெங்கட் நாராயணா சாலை, தி.நகர், சென்னை – 600 017
தொடர்புக்கு: 97907 40886 (ம) 99529 52686