Skip to content

கல்வியும் செல்வமும் வீரமும்

சிந்தனை செய் மனமே

கல்வியும் செல்வமும் வீரமும்

1966 ஆம் வருடம் சரஸ்வதி சபதம் என்ற ஒரு படம் வந்தது. அதில் கல்வியா செல்வமா வீரமா என்று ஒரு புகழ் பெற்ற பாடலும் உண்டு .
இது ஏ.பி. நாகராஜன் எழுதி இயக்கியது. புதுமைப்பித்தன் எழுதிய வாக்கும் வாக்கும் நாவலைஅடிப்படையாகக் கொண்டு சிவாஜி கணேசன் ,ஜெமினி கணேசன் , சாவித்திரி , பத்மினி , தேவிகா , கே.ஆர்.விஜயா ஆகியோர் நடித்துள்ளனர் . இப்படம் 3 செப்டம்பர் 1966 இல் வெளியிடப்பட்டது மற்றும் வணிக ரீதியாக வெற்றி பெற்றது.

கல்வி செல்வம் வீரம் என்ற மூன்றையும் பேசும் குறள்.

நான் சிறுவனாக இருந்த போது அதாவது 1960 களில் எங்கள் சித்தப்பா வீட்டில் கிட்டத்தட்ட 50 மாடுகள் இருக்கும் .எங்களிடம் ஐந்து மாடுகள். அவரிடம் 10 ஏக்கர் நன்செய் நிலம் எங்களிடம் இரண்டு ஏக்கர் புன்செய் நிலம் .

ஒருவர் வைத்திருக்கும் கால்நடைகளையும் அவர் வைத்திருக்கும் நிலபுலன்களையும் வைத்துத்தான் அவருடைய செல்வத்தின் மதிப்பு அளவிடப்படும். செல்வத்திற்கு மாடு என்று கூட ஒரு பெயர் உண்டு.

நாட்டில் அரசாட்சி சரியாக நடக்கவில்லை என்றால் ,அதாவது மன்னன் காத்தல் தொழிலை சரிவர செய்யவில்லை என்றால் நாட்டில் அமைதி இருக்காது. கால்நடை குறையும், அதாவது செல்வம் குறையும்.

மன்னர்கள் வேறு நாட்டின் மீது போர் தொடுத்து செல்லும்போது முதற்படியாக “ஆநிரை கவர்தல்” என்ற ஒன்று இருக்கும் .அடுத்தவர்கள் நாட்டிற்குரிய மாடுகளை ஓட்டிக்கொண்டு வந்து விடுவார்கள். அடுத்து தூதர்களை அனுப்புவார்கள். திறைப் பணம் கேட்பார்கள்.

அப்பொழுதும் பகை மன்னன் அமைதி பேச வரவில்லை என்றால் ,அடுத்த கட்ட நடவடிக்கை தொடங்கும்.தவிர்க்கமுடியாத கட்டத்தில் தான் போர் நிகழும்.உயிர் இழப்பு ஏற்படும்.

அதேபோல் நாட்டில் அமைதி நிலவவில்லை என்றால் பல்வகைத் தொழிலையும் செய்பவர்கள் முடங்கிப் போவார்கள் .நாட்டில் தொழில் சரியாக நடக்காது .அறிஞர்கள் ,படைப்பாளிகளுக்கு அவரவர்கள் துறையைப் பற்றிய நூல்களை சிந்தித்து எழுத ஏற்ற சூழ்நிலை அமையாது

நாட்டில் காவல் இல்லை என்றால்
அமைதி எப்படி வரும் …,
கல்வி ஏது தொழில்கள் ஏது அதனால் விளையும் செல்வம் ஏது

ஓர் அரசு நாட்டை முறைப்படி காக்கத் தவறினால் ஆக்கப்பணிகள் எதுவும் நடக்காது; முக்கியமான தொழில்களும் தேய்ந்து விடும்… கலைஞர்

நாட்டில் அரசன் சரியாக ஆட்சி செய்தால்தான் அந்த நாட்டில் கல்வியும் செல்வமும் ஓங்கும் என்பதே இந்தக் குறளின் கருத்து

அரசன் வீரனாக இருக்க வேண்டும் .நாட்டை காக்கும் திறன் படைத்தவனாக இருக்க வேண்டும் .

திருக்குறள்: 560

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.

சாலமன் பாப்பையா உரை:
காவல் செய்யவேண்டிய ஆட்சியாளர் மக்களைக் காவாத, போனால், அறனற்ற அவர் நாட்டில் பால் வளம் குறையும். ஞானியர் நூல்களை மறந்துவிடுவர்.

சி இராஜேந்திரன்
www.voiceofvalluvar.org
24/01/2023