Skip to content

திரு. அய்யா மோகன்,கள்ளக்குறிச்சி.

திரு. அய்யா மோகன், கள்ளக்குறிச்சி.

“குறள் அருவி” என்ற இதழின் ஆசிரியரான இவர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நன்கு அறிமுகமானத் தமிழாசிரியர். தனது இல்லத்தையும் வாகனத்தையும் கூட திருக்குறளால் அலங்கரிப்பவர். திருக்குறளை பள்ளிப்பாடமாக மட்டுமல்லாமல் வீடுகளிலும் தெருக்களிலும் வாரி இறைக்க வேண்டுமென்ற வெறியுடைய எனக்கு அய்யா மோகன் திரும்பும் இடமெல்லாம் திருக்குறளை முதன்மைப்படுத்துகிறார் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.

தன் பிள்ளைகளுக்கெல்லாம் தூயத்தமிழில் பெயர் வைத்துள்ளார். திருவள்ளுவரையும் வள்ளலாரையும் ஒரு சேரப் போற்றும் சிலரில் இவரும் ஒருவர். வள்ளலாரின் மாநாடு ஒன்றை மூன்று நாட்கள் கள்ளக்குறிச்சியில் நடத்திய போது சந்தித்தேன். எனது பணிகளை அடையாளப்படுத்த வேண்டுமென்பதற்காக பார்த்த மறுநிமிடமே என்னை மேடையேற்றி உரை ஆற்ற வாய்ப்பளித்தார்.

திருவள்ளுவருக்கு கள்ளக்குறிச்சியின் முதன்மையான இடத்தில் சிலை வைக்க வேண்டுமென்று முனைப்போடு முயன்று வருகிறார். மேலும் அங்குள்ள பல தமிழ் அமைப்புகளை இணைத்துக் கொண்டு செயல்படுங்கள், உறுதியாக சிலை அமைப்போம் என்று இவரிடம் கூறியுள்ளேன்.

திருக்குறள் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக்கு உதவியாக கள்ளக்குறிச்சியில் விளங்கும் இவரை இத்திருக்குறள் திருத்தொண்டர் தொகுப்பில் இணைத்துக்கொள்வதை பெருமையாக நினைக்கின்றேன்.

நன்றி
தொகுப்பு
திருக்குறள் சி. பன்னீர்செல்வம்
மாவட்டக் கல்வி அலுவலர் ( பணி நிறைவு )
திருவள்ளுவர் ஞான மன்றம்
ஜெயங்கொண்டம்