Skip to content

இலக்கிய திறனறிவு தேர்வு 2024

இந்த வருடம் தேர்வில் விருதுநகர் மாவட்டத்தில் வெற்றி பெற்ற
13 மாணவர்களில் 6 மாணவச் செல்வங்கள் சிப்பிப்பாறை அரசு மேல் நிலை பள்ளி மாணவர்கள்….

தலைமை ஆசிரியர்… திரு.நாகலிங்கம் அவர்கள்… தமிழாசிரியர்… திருமதி. ஜான்சி ராணி.. அவர்கள்..

கோவையில் வசிக்கும் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த திரு சங்கர்ராஜ் ( தொலை தொடர்புத் துறை) இலக்கிய திறனறித் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொருவரும் ரூபாய் 2100/- மதிப்புள்ள பாமரருக்கும் பரிமேலழகர் நூலை பரிசாக வழங்கி வருகிறார்.

இந்த அரும் பணியை கடந்த சில ஆண்டுகளாக செய்து வருகிறார்.

அவருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்

வெற்றி பெற்ற மாணவர்கள் , அவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் , நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்தும் பாராட்டும்

இலக்கிய திறனறித் தேர்வு பின்புலம்

தமிழ்நாட்டில் பிளஸ்-1 மாணவர்களுக்கு 2024-25-ம் ஆண்டுக்கான தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு அக்டோபர் 19-ந்தேதி நடத்தப்பட்டது.

இதற்கான அறிவிப்பு ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்படும்.

இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் இந்த ஆண்டு 04/09/24 அன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

“பள்ளி மாணவர்கள் தமிழ் மொழி இலக்கிய திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில், ‘தமிழ் மொழி இலக்கிய திறனறிவுத் தேர்வு’ நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2024-25-ம் ஆண்டுக்கான தமிழ் மொழி திறனறிவுத் தேர்வு, அடுத்த மாதம் (அக்டோபர்) 19-ந்தேதி நடத்தப்பட உள்ளது.

இந்த தேர்வில், 1,500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை வழியாக மாதம் ரூ.1,500 இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இந்த தேர்வில், 50 சதவீதம் அரசு பள்ளி மாணவர்களும், மீதமுள்ள 50 சதவீதம் அரசு பள்ளி மாணவர்கள் உள்பட பிற தனியார் பள்ளி மாணவர்களும் தேர்வு செய்யப்படுவார்கள்.

தமிழக அரசின் 10-ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தக்கத்தில் உள்ள பாடத்திட்டங்களின் அடிப்படையில் கொள்குறி வகையில் தேர்வு நடத்தப்படும். அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட தலைநகரங்களில் இந்த தேர்வு நடத்தப்படும். தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளில் பிளஸ்-1 வகுப்பு பயிலும் மாணவர்கள் அக்டோபர் மாதம் 19-ந்தேதி நடைபெறும் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

மாணவர்கள், www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்தில் நாளை05/08/24 (வியாழக்கிழமை) முதல் 19-ந்தேதி வரை விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, அதை பூர்த்தி செய்து ரூ.50 விண்ணப்ப கட்டணத்துடன் பள்ளி தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.”