வள்ளுவர் காட்டும் எழுவகை மாந்தர்கள்
Chennai Chennai, Indiahttps://youtu.be/m5BgfCxCBx8
https://youtu.be/m5BgfCxCBx8
*திரு பூவை பி. தயாபரன்* உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ( பணி நிறைவு ) புள்ளம்பாடி பகுதி 2 *முன்னோடித் திட்டம்-1330 அருங்குறளும் சொன்னால் பரிசு* தனது மகன் திருமூலநாதன் ஒன்றாம் வகுப்பிலேயே 1330 குறளும் மனனம் செய்ததால், 200 மேடைகள் ஏறியதாலும் பள்ளி மாணவர்கள் 1ஆம் வகுப்பு படிக்கும்போதே 1330 திருக்குறளும் கூறினால் பரிசு கொடுக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது அதன் விளைவாக 1997 இல் அறிவிக்கப்பட்டது 1998 முதல், தொடர்ந்து வருடம் தோறும் திருக்குறள்… Read More »முன்னோடித் திட்டம்-1330 அருங்குறளும் சொன்னால் பரிசு
*முனைவர் திருக்குறள் திருமூலநாதன்,ME PhD* உதவிப் பேராசிரியர், பொருளியல் துறை, ஐஐடி கான்பூர். *அன்று சாதனைச் சிறுவன். இன்று ஐஐடி உதவிப்பேராசிரியர் *பூவாளூர் பூவை பி. தயாபரன் – நாகவல்லி இணையரின் மகன் இந்திய அறிவியல் கழகம், பெங்களூரில், Game Theory இல் முனைவர் பட்டம் பெற்றவர்.4 வயதிலேயே 1330 திருக்குறளையும் மனனமாக சொல்லும் ஆற்றல் வாய்ந்தவர்.சிவபுராணம் அகவலை இரண்டரை வயதுக்குள்ளாகவே மனத்தில் இருத்தியவர். திரும்பத்திரும்ப வீட்டில் ஒலித்ததால் நினைவில் பதிந்தது. வேறு நிகழ்வுகள் நினைவில்லை. அதைப்போலவே… Read More »அன்று சாதனைச் சிறுவன் இன்று உதவிப் பேராசிரியர்
மொரிசியசின் மேனாள் கல்வியமைச்சராகவும், யுனெசுக்கோவில் இயக்குனராக 12 ஆண்டுகளுக்குமேல் பாரீசிலும், புதுதில்லியிலும் உள்ள அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற முனைவர்.ஆறுமுகம் பரசுராமன் அவர்கள் தலைமையில் 2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு யுனெசுக்கோவிற்கு திருக்குறளைக் கொண்டுசெல்லும் "Thirukkural for UNESCO" குழு சார்பாக மே ,20 - 2023 அன்று தமிழ்நாடு தலைமைச்செயலர் முனைவர்.வெ.இறையன்பு,இ.ஆ.ப. அவர்களை வள்ளுவர் குரல் குடும்பத்தின் ஒருங்கிணைப்பாளரும், ஓய்வு பெற்ற மூத்த அதிகாரி திரு.சி.இராசேந்திரன் IRS (ஓய்வு) அவர்களும் வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி அவர்களும் நேரில் சந்தித்து… Read More »யுனெசுக்கோவில் திருக்குறள் (Thirukkural for UNESCO) தன்னார்வக் குழு சார்பாக தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முனைவர்.வெ .இறையன்பு அவர்களுடன் சந்திப்பு
தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 1330 திருக்குறள் பயிற்சி. ஒவ்வொரு மாவட்டமும் 100 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும், பின்னர் 2026க்குள் ஒரு மாவட்டத்திற்கு 1000 ஆக அதிகரிக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் 38000 மாணவர்களை திருக்குறளை மனப்பாடம் செய்ய வேண்டும் என்பதே எங்களது கனவு. அவர்கள் சரியான நேரத்தில் சங்கத்தில் முக்கிய இடத்தைப் பெறுவார்கள் சமத்துவ, இணக்கமான, ஊழல் இல்லாத, திறமையான நிர்வாகம்/சமூகத்தை நோக்கி ஒரு சிறிய படி.