- This event has passed.
“உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகள்” – 18/04/2024
April 18, 2024 @ 6:30 pm
வணக்கம்,
இந்தியா, அமெரிக்காவைத் தொடர்ந்து இம்மாதம் சிங்கப்பூர், மலேசியா, துபாயில் “உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகள்” ஆய்வுக்குழுவின் அறிக்கையாக வெளிவந்துள்ள “Thirukkural Translations in World Languages” என்ற நூல் வெளியிடப்படவிருக்கிறது.
வட அமெரிக்காவில் தொடங்கிய இக்குழுவின் ஐந்து ஆண்டுகள் தொடர் பயணம் இத்திட்டத்தின் முதல் கட்டத்தை முடித்து “திருக்குறள் 2030” என்ற இரண்டாவது கட்ட இலக்கில் பயணத்தை தொடர்கிறது. உங்கள் அனைவரது வாழ்த்துகளோடு , இந்நூல் உலகெங்கும் பயணித்து அறிமுக விழா-வெளியீட்டு விழா கண்டு , திருக்குறளில் இன்னும் மொழிபெயர்க்கப்படவேண்டிய 158 மொழிகளை மொழிபெயர்த்து முடிக்கும் பணியைத் தனியாகவோ, பிற அமைப்புகள் வழியாகவோ விரைவாகச் செய்துமுடிக்கும் சிந்தனை வலிமையைப் பெறவேண்டும் என்பதே எமது குழுவின் நோக்கம். இதற்கு உங்கள் அனைவரின் ஆதரவும், வாழ்த்துகளும், உணர்வுகளும், இந்நூலில் என்ன உள்ளது என்று வாசித்துவிடவேண்டும் என்ற ஆர்வமும் இருந்தால் அது மிகப்பெரிய பங்களிப்பு. இதுவரை வெளிவந்துள்ள பல நாட்டுத் திருக்குறள் நூல்களின் மொழிபெயர்ப்புகளின் அச்சுப்பிரதிகள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுத் தொகுக்கப்பட்டுள்ளது. சென்னை வருபவர்கள் நேரில் கண்டு பெருமிதம் அடையலாம். தொடர்புகொள்ளுங்கள். இந்நூலை அனைவரும் பெற்று வாசித்து உங்கள் கருத்துகளை பகிருங்கள்.
அடுத்து வரும் நிகழ்ச்சிகளில் நீங்களும் நேரில் கலந்துகொண்டு சிறப்பிக்கவும். உங்கள் தொடர்பில் உள்ள சிங்கப்பூர், மலேசியா தமிழ் நட்புகளுக்கு, திருக்குறள் ஆர்வலர்களுக்கு நேரில் கலந்துகொள்ளப் பகிர்ந்துகொள்ளவும். உங்களை நேரில் சந்திக்க ஆர்வமாக உள்ளேன். நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் அனைத்து அமைப்புகளுக்கும் மிக்க நன்றி.. அவர்களுக்கு திட்டமிடலில் உதவ முன்பதிவு செய்தால் நிகழ்ச்சி சிறப்பாக அமையும்.
சிங்கப்பூர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள:
https://globaltamilevents.com/thirukkural-translations-in-world-languages-singapore-tview1260.html
மலேசியா நிகழ்ச்சியில் கலந்துகொள்ள:
https://globaltamilevents.com/thirukkural-translations-world-languages-malaysia-tview1263.html
வாருங்கள் சிந்திப்போம்.. ஊர் கூடி தேரிழுப்போம்..
நூல் தேவையானோர் இணையத்தில் பெற : www.eStore.ValaiTamil.com
நிகழ்ச்சி விபரங்களை விளம்பரங்களில் காணவும்.