Skip to content
Loading Events

« All Events

  • This event has passed.

திருக்குறள் கற்பித்தால் பயிலரங்கம்

July 11, 2024 @ 9:00 am - July 12, 2024 @ 5:00 pm

நண்பர் திரு வீ ப ஜெயசீலன் இந்திய ஆட்சிப் பணி
மாவட்ட ஆட்சியர் விருதுநகர் மாவட்டம் புதிது புதிதாக சிந்தித்துக் கொண்டிருக்கிறார்

திருக்குறளில் சிந்தனைகளில், திருக்குறள் அறக் கருத்துக்களில் தோய்ந்தவர்.

தீராக்காதல் திருக்குறள் திட்டத்தின் மூலம் தமிழகமெங்கும் போட்டி நடத்தி 15000 பள்ளி கல்லூரி மாணவர்களை ஓவியங்கள் வரையச் செய்தார். அதில் சிறந்த ஓவியங்களை தேர்வு செய்து தமிழ் இணையக் கல்விக்கழகம் வழியாக நாள்காட்டியாக வெளியிட்டார்.

வள்ளுவர் குரல் குடும்பத்தின் வேண்டுகோளை ஏற்று குறள் முற்றோதல் மாணவர்கள் எண்ணிக்கை 70 என்று மட்டும் இருந்த நிலையை மாற்றி ,உச்சவரம்பை முற்றிலும் நீக்கவும், பரிசுத் தொகையை உயர்த்தவும் காரணமாக இருந்தவர்.

தற்போது மாவட்ட ஆட்சியராக இருக்கும் போது மாநிலம் தழுவிய 1000 மாணவர்களுக்கு ஒரு வாரம் கோடைக்கால பயிலரங்கம் வெற்றிகரமாக நடத்தினார்.

தற்போது 2 நாள்கள் ஆசிரியர்களுக்கு , பெரும் ஆளுமைகளைக் கொண்டு குறள் கற்பித்தல் பயிலரங்கம் நடத்துகிறார்

தொடர்ந்து திருக்குறள் சார்ந்து இயங்கிக் கொண்டே இருக்கின்றார்.. அறம் விதைக்கிறார்..

உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம்,வள்ளுவர் குரல் குடும்பம் அவருக்கு இதயங்கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

மற்ற மாவட்ட ஆட்சியர்களும் இவரைப் பின்பற்றினால் நன்று. விரைவில் குறள் சார்ந்த சமுதாயம் உருவாக வழி வகுக்கும்.

சி . இராஜேந்திரன்
நிறுவுநர் ஒருங்கிணைப்பாளர்
வள்ளுவர் குரல் குடும்பம்
www.voiceofvalluvar.org
10/07/2024

Details

Start:
July 11, 2024 @ 9:00 am
End:
July 12, 2024 @ 5:00 pm
Event Category: