Skip to content
Loading Events

« All Events

  • This event has passed.

பஞ்சாபி மொழியில் “குறள் இனிது ” நூல்!

September 6, 2024 @ 11:00 am - 5:00 pm

திருக்குறளில் உள்ள மேலாண்மை கருத்துக்களை விவரித்து சோம வீரப்பன் எழுதிய 125 கட்டுரைகள் இந்து தமிழ் திசை நாளிதழில் வெளியாகின.

இக்கட்டுரை கள் பின்பு 2018 இல்
” குறள் இனிது – சிங்கத்துடன் நடப்பது எப்படி?”

எனும் தலைப்பில்
நூலாக வெளியிடப்பட்டன

இந்நூல் 7 பதிப்புகள் வெளிவந்து சிறப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது

பின்னர் இதில் 60 கட்டுரைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு “The Art of jogging with your Boss”

எனும் தலைப்பில் வெளியாகி சிறப்பாக விற்பனை ஆகி கொண்டு இருக்கிறது

இந்நூலுக்கு திரு பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் அவர்கள் முன்னுரை அளித்துள்ளார்கள்

இந்நூல் தற்பொழுது யஷ்பால் மான்வி அவர்களால் பஞ்சாபியில் மொழிபெயர்க்கப்பட்டு ” எஸ் பாஸ் ” எனும் தலைப்பில், யுனிஸ்டார் புக்ஸ் நிறுவனத்தினரால் வெளியிடப்படுகின்றது

இதற்கான முன்னுரையை தமிழ்நாடு அரசின் ஊரக மற்றும் கிராம வளர்ச்சித் துறையில்

கூடுதல் தலைமைச் செயலாளர் ஆகப் பணி புரியும் திரு ககன் தீப் சிங் பேடி அவர்களும்
ஏவொன் சைக்கிள் நிறுவனத்தின் தலைவரான ஓம்கார் சிங் அவர்களும்
கொடுத்துள்ளார்கள்

இதன் அறிமுக விழா பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லவ்லி ப்ரொபஷனல் யூனிவர்சிட்டியில் செப்டம்பர் ஆறாம் தேதி நடைபெற உள்ளது

பல்கலைக்கழக வேந்தர் முனைவர் அசோக்குமார் மிட்டல் அவர்கள் நூலை வெளியிட ,

டிராக்டர் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முன்னணி நிறுவனமான சோலங்கி இன்டர்நேஷனல் டிராக்டர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் திரு அமிர்து சாகர் மிட்டல் அவர்கள் பெற்றுக் கொள்கிறார்கள்.

Details

Date:
September 6, 2024
Time:
11:00 am - 5:00 pm
Event Category: