- This event has passed.
நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-86 25/10/2024
October 25, 2024 @ 6:30 pm - 7:45 pm
நிகழ்வு எண் 86
நாள்: 25/10/2024
வெள்ளிக்கிழமை
மாலை:- 06:30-07:45
குன்றக்குடி அடிகளார் (1924-1995) பிறந்தநாள் நூற்றாண்டை முன்னிட்டு அடிகளார் நூல்வரிசை குறித்து மாணவர்கள் மட்டுமே உரை நிகழ்த்தும் சிறப்புத்
தொடர்-3
பங்குபெறும் கல்லூரி: ஜமால் முகம்மது கல்லூரி, திருச்சிராப்பள்ளி
உரை நிகழ்த்துபவர்: ஜோ. ஜார்ஜ் இம்மானுவேல்
இணைப்பு:
https://valaitamil.zoom.us/j/98864769563?pwd=azdkZXdzd2VaalhEcEhuaUM0VTJQQT09
(ஒவ்வொரு வாரமும் இதே இணைப்பு, இதே நேரம்.)
அடிகளார் நூல்தொகுப்பு குறிப்பு:
திருவண்ணாமலை ஆதீனத்தின் 45ஆம் குருமகாசந்நிதானமாகப் பொறுப்பு வகித்த குன்றக்குடி அடிகளார் தமிழ்ச் சைவ மெய்யியலாளர், தமிழறிஞர், சமூகப்பணியாளர் என்றறியப்பட்டதோடு, உலகத் திருக்குறள் பேரவையை தோற்றுவித்து பல ஊர்களில் நிறுவி, திருக்குறளை திக்கெட்டும் கொண்டு சென்றவர். ‘திருவள்ளுவர் காட்டும் அரசியல்’, ‘குறட்செல்வம்’, ‘திருக்குறள் பேசுகிறது’, ‘குறள்நூறு’ எனப் பல திருக்குறள் நூல்களின் ஆசிரியர். தமிழ்நாடு அரசின் முதல் திருவள்ளுவர் விருது 1986ல் அடிகளாருக்கு வழங்கப்பட்டது. குன்றக்குடி அடிகளார் எழுதிய நூல்களின் எண்ணிக்கை 52. அனைத்து நூல்களும் தொகுக்கப்பட்டு ‘குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை’ என்ற பெயரில் 16 தொகுதிகளாக 6,000 பக்கங்களில் வெளிவந்துள்ளன (மணிவாசகர் பதிப்பகம்).
உரையாளர் குறிப்பு:
திருச்சியைச் சேர்ந்த ஜோ. ஜார்ஜ் இம்மானுவேல், ஜமால் முகம்மது கல்லூரியியில் முனைவர் பட்ட ஆய்வு செய்து வருகிறார். ‘தமிழ் நாவல்களில் மெய்யியல் நோக்கு’ என்பது இவரது ஆய்வுத் தலைப்பாகும். இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றவர். கவிதை சிறுகதை மற்றும் மொழிபெயர்ப்பு எனப் பல்வகை இலக்கிய படைப்புகளை தமிழுலகிற்குத் தந்தவர். இவரின் படைப்புகள் உயிர் எழுத்து, உயிர்மை, புரவி, அகநாழிகை, தளம், தமிழ்வெளி, வாசகசாலை, கலகம், மெய்ப்பொருள் ஆகிய இலக்கிய இதழ்களில் வெளி வந்துள்ளது. இவரின் முதல் சிறுகதைத் தொகுப்பான ’எமரால்ட்’, சீர்மை பதிப்பக வெளியீடாக அண்மையில் வெளியானது. இவரது ஜப்பானிய மொழிபெயர்ப்பு நூலான ‘பூனைகளில்லா உலகம்’ இதே ஆண்டில் வெளிவந்துள்ளது. நினைவுகள், காதல், காமம், கழிவிரக்கம், கயமை, கிறித்துவச் சமூக வெளிப்பாடும் அதன் கலாச்சார நுண்மைகளும் ஆகியவை ஜார்ஜ் ஜோசஃபின் கதைகளின் பேசுபொருள்கள்.