- This event has passed.
நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-85 18/10/2024
October 18, 2024 @ 6:30 pm - 7:45 pm
நிகழ்வு எண் 85
நாள்: 18/10/2024
வெள்ளிக்கிழமை
மாலை:- 06:30-07:45
குன்றக்குடி அடிகளார் பிறந்தநாள் நூற்றாண்டை (1924-1995) முன்னிட்டு அடிகளார் நூல்வரிசை குறித்து மாணவர்கள் மட்டுமே உரை நிகழ்த்தும் சிறப்புத்
தொடர்-2
பங்கு பெறும் கல்லூரி: ஜமால் முகம்மது கல்லூரி, திருச்சிராப்பள்ளி
உரை நிகழ்த்துபவர்: பா. யுவபாரதி
இணைப்பு:
https://valaitamil.zoom.us/j/98864769563?pwd=azdkZXdzd2VaalhEcEhuaUM0VTJQQT09
(ஒவ்வொரு வாரமும் இதே இணைப்பு, இதே நேரம்.)
அடிகளார் நூல்தொகுப்பு குறிப்பு:
திருவண்ணாமலை ஆதீனத்தின் 45ஆம் குருமகாசந்நிதானமாகப் பொறுப்பு வகித்த குன்றக்குடி அடிகளார் தமிழ்ச் சைவ மெய்யியலாளர், தமிழறிஞர், சமூகப்பணியாளர் என்றறியப்பட்டதோடு, உலகத் திருக்குறள் பேரவையை தோற்றுவித்து பல ஊர்களில் நிறுவி, திருக்குறளை திக்கெட்டும் கொண்டு சென்றவர். ‘திருவள்ளுவர் காட்டும் அரசியல்’, ‘குறட்செல்வம்’, ‘திருக்குறள் பேசுகிறது’, ‘குறள்நூறு’ எனப் பல திருக்குறள் நூல்களின் ஆசிரியர். தமிழ்நாடு அரசின் முதல் திருவள்ளுவர் விருது 1986ல் அடிகளாருக்கு வழங்கப்பட்டது. குன்றக்குடி அடிகளார் எழுதிய நூல்களின் எண்ணிக்கை 52. அனைத்து நூல்களும் தொகுக்கப்பட்டு ‘குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை’ என்ற பெயரில் 16 தொகுதிகளாக 6,000 பக்கங்களில் வெளிவந்துள்ளன (மணிவாசகர் பதிப்பகம்).
உரையாளர் குறிப்பு: செல்வி பா யுவபாரதி, ஜமால் முகம்மது கல்லூரியில் முதுகலை வணிக நிர்வாகம் பயிலும் மாணவர். தமிழ் ஆர்வம் மிக்க இவர், வாசிப்பை உயிராகக் கொண்டவர், பேச்சுத் திறமை மிக்கவர். கல்லூரிகளுக்கிடையே நடத்தப்படும் போட்டிகள் பலவற்றிலும் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். தமிழ் வளர்ச்சித்துறை, பகுத்தறிவாளர் கழகம், ‘கலைஞர் நூற்றாண்டு விழாக் குழு’ உள்ளிட்ட பல அமைப்புகள் நடத்திய போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் பல பெற்றுள்ளார். அடிகளார் நூல்வரிசையி்ன், முதல் தொகுதியில் இடம்பெறும் கட்டுரைகளான ‘வெள்ளை அறிக்கை’, மற்றும் ‘அழுக்காற்றை அகற்றுவது எப்படி?’ உள்ளிட்ட நான்கு கட்டுரைகளை, இவ்வுரையில் அறிமுகம் செய்கிறார். சுமார் 400 பக்கங்கள் கொண்ட முதல் தொகுதி, 11 கட்டுரைகளை உள்ளடக்கியது.
பங்கேற்கும் பிற கல்வி நிறுவனங்கள்:
அண்ணாமலைப் பல்கலைக் கழகம்.
அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி.
எஸ்.ஆர்.வி (SRV) கல்விக் குழுமம், திருச்சிராப்பள்ளி.
சங்கர கந்தசாமி கண்டர் கல்லூரி, பரமத்திவேலூர், நாமக்கல்.
வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரி, கரூர்.
பரணி பார்க் கல்விக் குழுமம், கரூர்.
நாச்சியப்ப சுவாமிகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவிலூர்.
இராமசாமி தமிழ்க் கல்லூரி, காரைக்குடி.
பாட்ரிஷியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை.
-இந்நிகழ்ச்சி, வள்ளுவர் குரல் குடும்பம், வலைத்தமிழ் மற்றும் கற்க கசடற ஆகிய மூன்று அமைப்புகள் இணைந்து நடத்துவதாகும்.