- This event has passed.
நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-83 04/10/2024
October 4 @ 6:30 pm - 7:45 pm
வெள்ளிதோறும் இணைய வழி
குறள் நூல்கள் அறிமுகத் தொடர்
நிகழ்வு-83
நூல்: திருக்குறள் புதிர்கள்
நூலாசிரியர்:
திரு. தமிழ்நாடன்
நயவுரையாளர்:
வழக்கறிஞர் திரு ந. பழநிதீபன்
நாள்:- 04/10/2024 வெள்ளிக்கிழமை
நேரம்:-
மாலை 06:30-07:45 மணி
இணைப்பு:
https://valaitamil.zoom.us/j/98864769563?pwd=azdkZXdzd2VaalhEcEhuaUM0VTJQQT09
(ஒவ்வொரு வாரமும் இதே இணைப்பு, இதே நேரம்.)
நூல்-நூலாசிரியர் குறிப்பு:
நூலாசிரியர் தமிழாசிரியர், தமிழ்நாடன் அவர்களின் இயற்பெயர் சுப்பிரமணியன் என்பதாகும். ‘வானம்பாடி’ கால புதுக்கவிஞர். இவரது கவிதை நூல் ஒரிய மொழி பெயர்ப்பிற்கான சாகித்திய அகாடமி விருது பெற்றது. ‘சேலத்துச் செம்மல்’ விருது பெற்ற பெருமைக்குரியவர். ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றபின் தமிழ்ப் பணியை முழுதாக ஏற்றுக்கொண்டுள்ளார். ‘திருக்குறள் புதிர்கள்’ எனும் இந்நூலானது 2009ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்நூலில் திருக்குறளைப் பற்றி பலரும் அறியாத புதிய, சுவையான செய்திகளைத் தந்துள்ளார். பேராசிரியர் முனைவர் இ. சுந்தரமூர்த்தி அவர்கள் “திருக்குறள் ஆய்வுக்குப் புதுவரவு” என்று தலைப்பிட்டு, முன்னுரை தந்து பெருமைப் படுத்தியுள்ளார்.
நயவுரையாளர் குறிப்பு:
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சார்ந்த திரு பழநிதீபன் அவர்கள், வழக்கறிஞராக 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார்.
கவிஞர் – எழுத்தாளர் – சமூக ஆர்வலர் – வழக்கறிஞர் என்ற பன்முகத் திறம் கொண்டவர்.
மேலும், இவரது, திருக்குறள் – பழநிதீபன் உரை என்கிற நூல் இவ்வாண்டில் வெளியானது. “From an Agriculturalist boy to an Advocate – Autobiography” என்கிற சுயசரித நூல் ஒன்றினையும் இதே ஆண்டில் எழுதி வெளியிட்டுள்ளார்.