- This event has passed.
நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-82 27/09/2024
September 27 @ 6:30 pm - 7:45 pm
வெள்ளிதோறும் இணைய வழி
குறள் நூல்கள் அறிமுகத் தொடர்
நிகழ்வு-82
நூல்: திருக்குறள் தெய்வக் கொள்கை
நூலாசிரியர்:
வித்வான் திரு பு.மா. கோவிந்தராஜ கோன்
நயவுரையாளர்:
பேராசிரியர் கனக. அஜிததாஸ்
‘முக்குடை’ மாத இதழ் ஆசிரியர்.
நாள்:- 27/09/2024 வெள்ளிக்கிழமை
நேரம்:-
மாலை 06:30-07:45 மணி
இணைப்பு:
https://valaitamil.zoom.us/j/98864769563?pwd=azdkZXdzd2VaalhEcEhuaUM0VTJQQT09
(ஒவ்வொரு வாரமும் இதே இணைப்பு, இதே நேரம்.)
நூல்-நூலாசிரியர் குறிப்பு:
நூலாசிரியர் வித்வான் திரு பு.மா. கோவிந்தராஜ கோன் அவர்கள் சென்னை தியாகராயச் செட்டியார் உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றியவர்.
சிலப்பதிகாரத்தின் நிறைவுப் பகுதியில் இளங்கோவடிகள் கூறும் அறிவுரைகளின் முதல் சொற்றொடரான “தெய்வம் தெளிமின்” என்ற சொல்லாடல் அவரை ஈர்த்தது.
இளங்கோவடிகள் மற்றும் வள்ளுவர் ஆகியோரின் தெய்வம் பற்றிய கருத்துக்களையும், ஏனைய பண்டைய தமிழ் இலக்கியங்கள் காட்டும் தெய்வம் சார்ந்த கருத்துக்களையும் தொகுத்து நூலாக ஆக்கி உள்ளார். 1947ஆம் ஆண்டு வெளியான இந்நூலை முத்தமிழ் நிலையம் வெளியிட்டுள்ளது.
நயவுரையாளர் குறிப்பு:
பேராசிரியர் திரு கனக. அஜிததாஸ் அவர்கள் 36 ஆண்டுகள் கல்லூரிகளில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி, ஒய்வு பெற்றவர். தாவர தொழில் நுட்பவியல் துறை தொடர்பான இவரது ஆய்வுக் கட்டுரைகள் உலகளாவிய ஏடுகளில் வெளிவந்துள்ளன. உலகளாவிய கருத்தரங்குகள் பலவற்றில் பங்கு கொண்டு உரை நிகழ்த்தியுள்ளார். கல்லூரி பாடத்திட்டக் குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். தற்போது ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளில் வெளியாகும் “முக்குடை” எனும் மாத இதழின் ஆசிரியராக உள்ளார். மேலும், ஜைன இளைஞர் மன்றத் தலைவராகவும், “அகிம்சை நடை” எனும் அமைப்பின் தலைவராகவும் பணியாற்றி வருகிறார்