Skip to content
Loading Events

« All Events

  • This event has passed.

நவில்தொறும் நூல்நயம் தொடர் நிகழ்வு-79 06/09/2024

September 6, 2024 @ 6:30 pm - 7:45 pm

நவில்தொறும் நூல்நயம்
வெள்ளிதோறும் இணைய வழி
குறள் நூல்கள் அறிமுகத் தொடர்

நிகழ்வு-79

நூல்: குறள் வானம் (அறத்துப் பால்)
ஆசிரியர்: பேராசிரியர் சுப வீரபாண்டியன்
நயவுரையாளர்: திரு கோ இமயவரம்பன்

நாள்:- 06/09/2024 வெள்ளிக்கிழமை
நேரம்:- மாலை 06:30-07:45 மணி

இணைப்பு:
https://valaitamil.zoom.us/j/98864769563?pwd=azdkZXdzd2VaalhEcEhuaUM0VTJQQT09
(ஒவ்வொரு வாரமும் இதே இணைப்பு, இதே நேரம்.)

நூல்-நூலாசிரியர் குறிப்பு:
திராவிட இயக்க சிந்தனையாளர் பேராசிரியர் சுப வீரபாண்டியன், தொலைக்காட்சிகளில் திருக்குறள் குறித்து ஆற்றிய உரைகளின் நூல் வடிவமே இந்நூல் ஆகும். இரா சாரங்கபாணியாரின் ‘திருக்குறள் உரை வேற்றுமை’ என்னும் நூலே, அதன் திருக்குறள் விளக்கம் பெற உதவிய பேராசான் என்கிறார் ஆசிரியர் சுபவீ. அதோடு, இருபதுக்கும் மேற்பட்ட உரை நூல்களை ஒப்பிட்டு தனக்கு உருவான புதுப் பார்வையை இந்நூலில் பதிவு செய்திருப்பதாகக் கூறுகிறார், சுபவீ. பொருட்பால் மற்றும் காமத்துப் பால் குறித்தும் நூல் எழுதும் எண்ணத்தையும் பதிவிடுகிறார். வானவில் புத்தகாலயம் (2012) இந்நூலை வெளியிட்டுள்ளது.

நயவுரையாளர் குறிப்பு:
உரையாளர் திரு இமயவரம்பன் அவர்கள், ரிசர்வ் வங்கியில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ‘வள்ளுவர் குரல் குடும்ப’ (VoV Family) உறுப்பினர் என்று சொல்லிக் கொள்வதிலேயே பெருமையடைவதாகக் கூறுகிறார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், வரலாற்றில் முதுகலைப் பட்டம் பயின்ற இவர், தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் மிக உடையவர். குறிப்பாக, திருக்குறளில் நாட்டம் மிகக் கொண்டவர். சமூக ஊடகங்களில் ‘தினம் ஒரு திருக்குறள்’ எழு சீர் அமைப்பு, சந்தி பிரித்த அமைப்பு, மற்றும் ஐந்து உரைகளுடன் அன்றாடம் பதிவிட்டு வரும், செயல் வீரர்.

Details

Date:
September 6, 2024
Time:
6:30 pm - 7:45 pm
Event Categories:
,